பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா, 2026-ஆம் ஆண்டு குறித்து கணித்துள்ள தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026-ஆம் ஆண்டு உலகிற்கு ஒரு சவாலான ஆண்டாக இருக்கும் என்றும், குறிப்பாக போர், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சமூக அமைதியின்மை போன்றவை உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தற்போதைய சர்வதேச அரசியல் சூழல் மற்றும் போர் பதற்றங்களைக் காணும்போது, அவரது இந்த கணிப்புகள் உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் பலரிடையே எழுந்துள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக 2026-ஆம் ஆண்டு ஒரு மாபெரும் புரட்சியை சந்திக்கும் என பாபா வங்கா கணித்துள்ளார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் மிக ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், இது மனித உறவுகள் மற்றும் மனநிலையை பாதிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விண்வெளித் துறையில் வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழும் என்றும், குறிப்பாக 2026 நவம்பர் மாதத்தில் மனிதர்கள் முதன்முறையாக வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் அவரது கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, 2026-ல் தங்கத்தின் விலை மிகக்கடுமையாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், வங்கி அமைப்புகளிலும் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. அறிவியல் ரீதியாக இவை சிலருக்கு வியப்பாகத் தோன்றினாலும், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தை கவனிக்கும்போது, பாபா வாங்காவின் இந்த ‘பகீர்’ கணிப்புகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…