Categories: CINEMA

சிவகார்த்திகேயனின் 5 வருட உழைப்புக்கு பலன் கிடைத்ததா.. அனல் பறக்கும் ‘அயலான்’ பட விமர்சனம்..

நிறைய எதிர்பார்ப்புகளுக்கு இடையே, சிவகார்த்திகேயன் நடிப்பில் பல தடைகளை கடந்து இன்று அயலான் ரிலீஸ் ஆனது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார்தான், இந்த படத்தின் இயக்குநர். அயலான் படத்துக்கு இசையமைத்திருப்பது இசைப்புயல் ஏஆர் ரகுமான். அயலான் படம் எப்படியிருக்கிறது என்று பார்ப்போமா, மனித சக்தியை விட பெரிய சக்தியை உருவாக்கி, உலகத்தையே தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆசைப்படும் வில்லன். அவனது கையில் ஏலியன் உலகத்தில் இருந்து தவறி விழுந்து பூமிக்கு வந்த ஒரு கல் கிடைக்கிறது. சக்தி வாய்ந்த அந்த கல்லை, வில்லன் ஆராய்ச்சி செய்யும்போது அந்த ஆராய்ச்சி கூடமே வெடித்து சிதறுகிறது. பூமியின் தட்பவெப்ப நிலை மாறுகிறது. விவசாயம் பாதிக்கிறது. மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிறது.

இதில் விவசாயத்துக்காக பாடுபடும் சிவகார்த்திகேயனும் பாதிக்கப்படும் நிலையில், ஏலியன் உலகில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன், வில்லனை எதிர்க்கிறது. அப்போது வில்லன் கையில் இருந்து சக்தி மிகுந்த அந்த கல்லால் ஏலியனை அழிக்க முயற்சிக்கும் போது சிவகார்த்தியேனுடன் சேருகிறது ஏலியன். பிறகு சிவகார்த்திகேயனும், ஏலியனும் சேர்ந்து வில்லனின் சதித்திட்டங்களை முறியடித்து ஜெயித்தார்களா, மீண்டும் ஏலியன் திரும்பி சென்றதுதான் படத்தின் சயன்டிபிக் கதை. இன்று நேற்று நாளை படத்தை தொடர்ந்து மீண்டும் தன்னை சிறந்த இயக்குநராக ரவிக்குமார் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

#image_title

 

இந்த படத்தை பொருத்தவரை பிளஸ் பாயிண்டுகள் என்றால், ஏஆர் ரகுமான் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். டெக்னிக்கல் சப்போர்ட் இந்த படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. அதாவது, விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகள் மிகச்சிறப்பாக படத்தை மாற்றியிருக்கிறது. அவர்களது கடின உழைப்பு திரையில் தெரிகிறது என்றோ சொல்லலாம். மேலும் காமெடி காட்சிகள் பிரமாதமாக இருக்கின்றன. யோகிபாபு, கருணாகரன், சிவகார்த்திகேயன், ஏலியன் காம்பினேஷன் காமெடி படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்கிறது.

#image_title

 

அதனால் படத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை. மற்றபடி படத்தில் இருக்கும் மைனஸ் பாயிண்டுகளாக, சிவகார்த்திகேயன் கெட்டப், நடிப்பு பல படங்களை போலவே இருக்கிறது. வித்யாசம் காட்டியிருக்கலாம். வில்லன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லாதவர். அவருக்கும் நடிப்பு அறிமுமில்லை என்பது போல ஏனோ தானோவென்றுதான் நடித்திருக்கிறார். ஏஆர் ரகுமான் பின்னணி இசை போல பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி அயலான் ரசிகர்களின் மனங்களை வெல்வான் என்று உறுதி சொல்லலாம். “அயலான்” படத்தை பொறுத்தவரை 5க்கு 4 ஸ்டார் * * * * மகிழ்ச்சியாக தரலாம்.

#image_title

Sumathi
Sumathi

Recent Posts

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

26 நிமிடங்கள் ago

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

1 மணி நேரம் ago

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

4 மணி நேரங்கள் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

4 மணி நேரங்கள் ago

கொண்டாட்டம் ஆரம்பம்.. வெட்கத்தில் சிவந்த நடிகர் வரலட்சுமி முகம்.. வைரலாகும் மெஹந்தி கிளிக்ஸ்..!!

தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகவும் சரி வில்லியாகவும் சரி தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல…

5 மணி நேரங்கள் ago

4 லட்சம் பேசிட்டு 1.50 லட்சம் தான் வாங்குனாங்க நடிகை அமலா.. பலவருடங்களுக்கு பிறகு உணமையை உடைத்த இயக்குநர்..

பிரபல நடிகையான அமலா புதுபாடகன் என்ற திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தில் பாதி சம்பளமே வாங்காமல் நடித்தாராம். இதனை படத்தின்…

5 மணி நேரங்கள் ago