பொங்கல் விழாவை முன்னிட்டு சினிமாத்துறையில் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும்; சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும் ; விஜய் சேதுபதி நடிப்பில் மேரி கிறிஸ்மஸ் திரைப்படமும் ; அருண் விஜய் நடிப்பில் மிஷின் பார்ட் 1 திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது. இதில் பொங்கல் ரேசாக கேப்டன் மில்லர் VS அயலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இதில் வசூல் வேட்டைக்கு சவால்விடும் திரைப்படமாக கேப்டன் மில்லர் VS அயலான் இருந்தன. இதில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் வசூல் ரீதியாக முன்னேறி இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாளில் நல்ல வசூல் பெற்றுள்ளது என தகவல் கசிந்த நிலையில் தனுசு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் ஆட்டம் ஆடியும் கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் தற்போது அயலான் திரைப்பட தயாரிப்பாளர் சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அயலான் வசூல் ரிப்போட்டே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் மாட்டு பொங்கலில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிவகார்த்திகேயனின் படம் என்பதால் அனைவரும் குடும்பத்துடன் வந்து படம் பார்த்தார்கள்.
இதனால் அயலான் திரைப்படம் 60 கோடி வசூல் ஈட்டியது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வசூல் ரிப்போட்டை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, இதில் 50 கோடியை வசூலை நெருங்கி விட்டது என்ற அறிவிப்பை மட்டுமே தெரிவித்துள்ளது. இந்த செய்தியை கேட்ட தனுஷ் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…