Categories: சினிமா

அப்ப எல்லாம் ஹீரோக்களுக்கு வசூல் விவரமே சொல்ல மாட்டோம்.. சம்பளம் இப்படிதான் ஏத்துவாங்க?- ஏவிஎம் குகன் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவின் புராதனமான சினிமா ஸ்டுடியோக்களில் ஒன்று ஏவிஎம் நிறுவனம். தமிழ் சினிமா பேசத்தொடங்கியதில் இன்றுவரை சினிமா தொழிலில் அவர்கள் மூன்று தலைமுறையாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவில் 40 களில் இருந்து 70 களின் இறுதிவரை தொடர்ச்சியாக படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் அவற்றை ரிலீஸ் செய்து வெற்றிகொடி நாட்டிய நிறுவனம் ஏவிஎம். அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஏ வி மெய்யப்ப செட்டியார் இறந்த போது சில ஆண்டுகள் அவர்கள் படம் தயாரிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கி செகண்ட் இன்னிங்ஸிலும் வெற்றி கண்டது. அப்போது ஏவிஎம் நிறுவனம் முரட்டுக்காளை மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய படங்கள் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரித்தனர். ஆனால் சினிமா தொழிலில் ஏற்பட்ட மாற்றத்தால் ஒரு கட்டத்தில் சினிமா தயாரிப்பதை நிறுத்திவிட்டு திரைக்குப் பின்னான வேலைகளில் கவனம் செலுத்தினர். கடைசியாக அவர்கள் சிவாஜி மற்றும் அயன் போன்ற பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்த பின்னர் முழுவதுமாக திரைப்பட தயாரிப்பில் இருந்து விலகினர்.

avm guhan

தற்போது ஏவிஎம் ஸ்டுடியோவின் பெரும்பகுதி விற்கபட்டு குடியிருப்பு, மருத்துவமனை மற்றும் பள்ளி கல்லூரிகள் கட்டப்பட்டு விட்டன. இப்போது அவர்களின் நான்காம் தலைமுறையினரான அருணா குகன் வெப் சீரிஸ்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் ஏவி மெய்யப்ப செட்டியாரின் மகன்களில் ஒருவரான ஏவிஎம் குகன் தங்கள் காலத்தில் இருந்த சினிமா தயாரிப்புப் பாணி பற்றியும்  வசூல் விவரங்கள் பற்றியும் பேசியுள்ளார். அதில் “அந்த காலத்தில் எல்லாம் நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் வசூல் கணக்கையே சொல்ல மாட்டார்கள். ஆனால் ஒரு படம் வெள்ளி விழா தாண்டி ஓடியது என்றால் நடிகர்கள் சம்பளத்தை ஏற்றிக் கொள்வார்கள். 75 ஆயிரம் சம்பளம் வாங்கினால் ஒரு ஹிட்டுக்குப் பிறகு அதை ஒரு லட்சமாக ஏற்றிக் கேட்பார்கள். ஆனால் படம் தோல்வி அடைந்தால் சம்பளத்தைக் குறைக்க மாட்டார்கள்’ எனக் கூறியுள்ளார்.

 

vinoth

Recent Posts

“ரோடு காலியா இருக்கு…. ஆனா…” செடிகளுக்கு இடையே புகுந்து சென்ற பைக் ஓட்டி…! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அருகில் உள்ள சாலை காலியாக இருந்தபோதிலும், நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தைப் பாதசாரிகள் நடமாடும்…

5 minutes ago

விஜய் எடுத்த அதிரடி முடிவு…. செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவியா?…. கூட்டணிக்குள் பெரும் புயல்…. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதிய வியூகங்களும் மாற்றங்களும்…

7 minutes ago

“என்னை காப்பாத்துங்க…” அலறி சத்தம் போட்ட சிறுமி…! வழிமறித்து அத்துமீறிய வாலிபர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மீனாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பயிற்சி வகுப்பிலிருந்து மிதிவண்டியில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை பைக்…

13 minutes ago

காலடியில் உருண்டோடிய தொப்பி… உடனடியாக முதல்வர் விஜய் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…. தீயாய் பரவும் வீடியோ….!

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா…

14 minutes ago

“என் பொண்டாட்டிய பாரு..” ரகசிய வீடியோ எடுத்து மிரட்டல்….. கணவனின் லீலைகளை அம்பலப்படுத்திய மனைவி…. மயிலாடுதுறையில் பரபரப்பு….!

மயிலாடுதுறையைச் சேர்ந்த 31 வயதான அருண் என்பவருக்கும், காரைக்காலைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் 12-ஆம்…

18 minutes ago

உச்சகட்ட கொடூரம்…! எல்ஜிபிடிகியூ ஆர்வலர் மேட் சந்து படுகொலை… சமூக வலைதள போலி பதிவுகளை நம்ப வேண்டாம்… போலிஸ் ஆணையர் வெளியிட்ட பரபரப்பு தகவல்…!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிரபல எல்ஜிபிடிகியூ சமூக ஆர்வலரும், ஒப்பனைக் கலைஞருமான மேட் சந்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்…

20 minutes ago