Categories: CINEMA

படத்துக்கு பிரமோஷன் இப்படி கூட பண்ணலாமா? ஒரு பலூனை வச்சு ‘பாவ மன்னிப்பு’ படத்த ஹிட்டாக்கிய AVM நிறுவனம்!

தமிழ் சினிமாவில் 40 களில் இருந்து 70 களின் இறுதிவரை தொடர்ச்சியாக படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் அவற்றை ரிலீஸ் செய்து வெற்றிகொடி நாட்டிய நிறுவனம் ஏவிஎம். அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஏ வி மெய்யப்ப செட்டியார் இறந்த போது சில ஆண்டுகள் அவர்கள் படம் தயாரிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கி செகண்ட் இன்னிங்ஸிலும் வெற்றி கண்டது. அப்போது ஏவிஎம் நிறுவனம் முரட்டுக்காளை மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய படங்கள் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரித்தனர். அப்போது மாஸ் ஹீரோக்களுக்கான படங்கள் மட்டும் இல்லாமல், குடும்ப ரசிகர்களுக்கான குடும்பக் கதை கொண்ட படங்களையும் எடுத்தனர்.

ஏவிஎம் நிறுவனம் சிறிய பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் அதை பிரம்மாண்டமாக மக்கள் மத்தியில் விளம்பரப் படுத்தி சிறப்பாக மார்க்கெட்டிங் செய்யும் யுக்தியைக் கையாளும் . பல படங்களுக்கு அவர்களின் விளம்பரம் மிகச்சிறப்பாக அமைந்து மக்களை தியேட்டருக்குள் இழுத்துள்ளது.

அப்படி சிவாஜி, ஜெமினி ஆகியோர் நடிப்பில் உருவான பாவமன்னிப்பு படத்துக்கு நூதனமான முறையில் விளம்பரம் செய்து மக்களை ஆச்சர்யப்பட வைத்தனர். 1961 ஆம் ஆண்டு உருவான பாவ மன்னிப்பு திரைப்படத்தை மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக்க மிகவும் பிரமாண்டமான அதே வேளையில் புதுமையான ஐடியா ஒன்றை கையில் எடுத்துள்ளது ஏவிஎம் நிறுவனம்.

இதற்காக ஜப்பானில் இருந்து ஒரு ராட்சச ஹீலியம் பலூன் ஒன்று வாங்கி வரப்பட்டு, சென்னை சாந்தி தியேட்டர் அருகே உயரத்தில் பறக்க விடப்பட்டிருந்தது. அந்த பலூனின் மீது ஏவிஎம் நிறுவனத்தின் பெயர் இடம்பெற, அதன் வால் போல் நீளமாக பாவமன்னிப்பு என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த பலூன் காற்றில் ஆடுவதை மவுண்ட் ரோட் வழியாக சென்ற அனைத்து மக்களும் பார்த்து வாயில் விரல் வைத்துள்ளனர். இதுவே மக்களை திரையரங்குக்கு இழுக்க ஒரு காரணியாகவும் அமைந்துள்ளது. பாவ மன்னிப்பு படத்தின் வெற்றியில் இந்த பலூன் விளம்பரத்துக்கும் ஒரு முக்கியப் பங்குண்டு என சொன்னால் அது மிகையாகாது.

vinoth

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

2 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

2 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

3 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

16 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

17 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

17 மணி நேரங்கள் ago