உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாரா பகுதிக்கு உட்பட்ட புத்தரேஷ்வரில், சட்டவிரோதமாக இயங்கி வந்த பால் பண்ணைகளுக்கு எதிராகக் காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த சட்டவிரோதப் பண்ணை உரிமையாளர்கள், சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது திடீரென கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலின் போது, தடுத்து நிறுத்த முயன்ற காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து இரண்டு பெண்களைக் கைது செய்துள்ளதோடு, பண்ணையில் இருந்த கால்நடைகளைப் பறிமுதல் செய்து மாநகராட்சியின் பொறுப்பில் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…
அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…
கோட்டயம் மாவட்டத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்காமல் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா கார், பல வாகனங்கள் மீது…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால்…
தனியார் பள்ளிகளுக்கு 20 ஆண்டு கால நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட…
நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுடனான தனது 15 ஆண்டு கால காதல் மற்றும் திருமணம் குறித்து சுவாரஸ்யமான…