கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் நீண்டகரையைச் சேர்ந்த 24 வயதான அஞ்சு என்ற டேட்டா அனாலிடிக்ஸ் முதுகலை பட்டதாரிப் பெண், தனது கணவர் நந்து மற்றும் அவரது பெற்றோரால் கடுமையான உடலளவிலான தாக்குதல்களுக்கும் ஆளாகியுள்ளார். ஜூலை 27-ல் திருமணம் நடந்த நிலையில், பெண் வீட்டில் தந்த வரதட்சணை போதவில்லை எனக் கூறித் திருமணமான ஒரே வாரத்தில் கொடுமைகள் தொடங்கின.
பின்னர் கணவர் பணிபுரியும் சவூதி அரேபியாவிற்கு அஞ்சு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு இச்சித்திரவதைகள் தீவிரமடைந்தன. பிரஷர் குக்கர், லேப்டாப் சார்ஜர், பெல்ட் போன்ற பொருட்களைக் கொண்டு தலையிலும் உடலின் பல்வேறு பகுதிகளிலும் கொடூரமாகத் தாக்கப்பட்டதில், அவர் உடலில் 30-க்கும் மேற்பட்ட காயங்களும் ரத்தக் கட்டுகளும் ஏற்பட்டுள்ளன.
செப்டம்பர் 30 அன்று கேரளா திரும்பிய அஞ்சு, சவரா காவல்துறையில் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள கணவர் நந்துவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, நந்து மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் நேரில் சந்தித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா, அவருக்குத் தேவையான முழு சட்டப் பாதுகாப்பும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையும் உறுதி செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.
ஜெய்பூர் ஜகத்புரா பகுதியில் உள்ள வி.ஐ.டி சாலையில் இரண்டு குழுக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. வாய் தகராறாகத்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதிக்குட்பட்ட குஷால்நகரில், கடந்த செப்டம்பர் 25 அன்று மாலை 4:30 மணியளவில் பயங்கர தாக்குதல்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால், 19…
திருவம்பாடி பேருந்து நிலையத்திற்குள் வியாழக்கிழமை நுழைந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மோதியதில், பிளஸ் ஒன் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்தின்…
குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த மூத்த சகோதரருக்கு தொழில் தொடங்குமாறு அறிவுரை வழங்கிய நிலையில் ஏற்பட்ட தாகராறில், அவரைத்…
இந்தியாவின் 'சிலிகான் வேலி' என்று அழைக்கப்படும் பெங்களூரு, ஐடி துறையின் மையமாக மாறுவதற்கு முன்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் உகந்த…