Categories: சினிமா

அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஆஜரான அட்லீ – பிரியா தம்பதி.. பாக்க செம்மையா இருக்காங்களே..

Spread the love

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, நீத்தா தம்பதியின் இளைய மகன் ஆனந்துக்கும், ராதிகா மெர்சென்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மார்ச் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை திருவிழா போன்று திருமண நிகழ்ச்சிகள் நடக்கிறது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடக்கும் இந்த பிரமாண்ட திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

பாலிவுட்டின் முக்கிய ஆட்கள் எல்லாம் ஏற்கனவே ஜாம்நகருக்கு சென்றுவிட்டார்கள். திருமண நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களை புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பதில் புகைப்படக் கலைஞர்கள் படுபிசியாக இருக்கிறார்கள். இவ்விழாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பெரும் கோடீஸ்வரர்கள், முக்கிய பிரமுகர்கள் வர உள்ளார்கள்.

குஜராத் ஜாம்நகரில் உலக நாடுகளின் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை குவிந்துள்ளனர். அதில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், இவாங்கா டிரம்ப், பூட்டான் மன்னர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல் சினிமா பிரபலங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரஜினிகாந்த், ராம் சரண் , ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், அமீர்கான், இயக்குநர் அட்லீ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மேலும், விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, பொல்லார்ட், ட்ரெண்ட் போல்ட், சாம் கரன், சாய்னா நேவால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் திரையுலகை பொறுத்த வரை இயக்குனர் அட்லீ தனது மனைவி பிரியா மற்றும் குழந்தையுடன் கலந்து கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.  இந்நிலையில் ஏற்கெனவே அட்லீ திருமண விழாவில் பிரியாவுடன் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்பொழுது கியூட் லுக்கில் இருவரும் திருமண விழாவில் கலந்து கொண்ட  புகைப்படம் இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

 

Begam

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

13 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

13 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

13 மணத்தியாலங்கள் ago