Categories: சினிமா

படத்துல லாஸ் ஆனா என்ன, புது பிசினஸில் கல்லாகட்டும் அட்லீ – பிரியா தம்பதி.. ஆரம்பிச்ச உடனே இவ்வளவு பெரிய வெற்றியா..?

Spread the love

ராஜா ராணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அடுத்தடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல் , பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த நான்கு படங்களுமே கிட் அடித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அட்லி அங்கு முதல் படமே ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் நயன்தாராவும் நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்தது .

இதனை அடுத்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து படம் எடுக்க இருக்கிறாராம். இது தவிர அங்கு பட தயாரிப்பிலும் பிசியாக இருக்கிறார். அதன்படி பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் தயாரிப்பாளராக என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். கீர்த்தி சுரேஷ்  பாலிவுட்டில் நடித்த முதல் திரைப்படம் இதுதான். இந்த திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸ் ஆனது. இது விஜய் நடித்த தெறி படத்தின் ரீமேக். இந்த படம் படுதோல்வியை சந்தித்தது .

சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடி கூட வசூலிக்கவில்லை. இதனால் அட்லிக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் அட்லியும் அவருடைய மனைவி பிரியா இருவரும் இணைந்து பெங்களூரு ஜவாஸ் என்று அழைக்கப்படும் அணியை வாங்கியுள்ள நிலையில் விளையாட்டு அரங்கில் அதிரடியாக நுழைந்துள்ளன. பெங்களூரு ஜாவாஸ் அணியின் உரிமையாளரான இவர்கள் சினிமாவை தாண்டி இந்த தொழிலில் கலக்கி கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மும்பையில் உலக கால்பந்தாட்ட லீப் போட்டியில் அட்லி மற்றும் பிரியா தம்பதியின் பெங்களூரு ஜாவாஸ் ஹைதராபாத் சூப்பர் ஸ்டார் சனியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.  இந்த வெற்றியை தங்கள் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு பிரியாவும் அட்லியும் கொண்டாடியுள்ளனர். தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

மின்னஞ்சல் அனுப்பினாலே போதும்…! கைநிறைய சம்பளத்துடன் ஜிப்மர் மருத்துவமனையில் வேலை… விண்ணபிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…

17 minutes ago

“கூல் டிரிங்க்ஸ் வேண்டாம்…” கோடை வெயிலில் குழந்தைகளைப் பாதுகாக்க மருத்துவர் சொல்லும் அட்வைஸ்…!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…

32 minutes ago

ஐடி ஊழியர்களே உஷார்…! குனிந்து வேலை பார்ப்பதால் கழுத்து எலும்பில் தேய்மானமா…? இதோ எளிய தீர்வுகள்…!!

தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…

40 minutes ago

நிதி நெருக்கடி தீரும்; செல்வம் பெருகும்….! யமனின் வக்கிர பெயர்ச்சியால் ஜொலிக்கப்போகும் ராசிகள்… உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…

48 minutes ago

BREAKING: தேர்தலில் இவர்தான் முதலிடம்…. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வெளியான அதிரடி ரிப்போர்ட்…!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…

2 மணத்தியாலங்கள் ago

ஓட்டு போட போறீங்களா?.. லிஸ்டுல பெயர் இருந்தா மட்டும் போதாது.. கையில் இந்த ‘ஒரிஜினல்’ இருக்கணும்…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு…!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…

2 மணத்தியாலங்கள் ago