தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. குறிப்பாக, கடந்த சில காலங்களாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நிலவி வந்த சிறுசிறு கசப்புகளைப் போக்கும் வகையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ராகுல் காந்தி தனது முழு ஒத்துழைப்பையும் திமுக தலைமைக்கு அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்க திமுக தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் போட்டியிடவும், அங்கு அக்கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான அனைத்துப் பக்கபலத்தையும் திமுக வழங்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியில் உள்ள சில நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து முன்வைக்கப்பட்ட புகார்களுக்கு, இனி அத்தகைய குளறுபடிகள் நடக்காது என ராகுல் காந்தி தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மற்றொருபுறம், திமுக கூட்டணியில் உள்ள விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுக்கான இடங்களும் ஓரளவு முடிவாகியுள்ளன. விசிக இரட்டை இலக்கத் தொகுதிகளை எதிர்பார்த்தாலும், அவர்களுக்குத் தமிழகத்தில் 6 தொகுதிகளும், புதுச்சேரியில் சில இடங்களும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதேபோல், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக ஆகியவற்றுக்குத் தலா 6 இடங்கள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளைத் தனது பக்கம் இழுக்க திமுக தரப்பு முயற்சி செய்த போதிலும், சில நிபந்தனைகள் மற்றும் சின்னம் தொடர்பான சிக்கல்களால் அது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 15 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பு இருந்தாலும், திமுக அவர்களை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வலியுறுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 159 தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் முழுமையாக இறுதி செய்யப்படும்போது, இந்த எண்ணிக்கையில் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம். எது எப்படியோ, ‘ஹவுஸ்ஃபுல்’ கூட்டணியாகத் தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராகிவிட்டது அறிவாலயம்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…