CINEMA
பிக் பாஸ் வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடிய அசிம்!… பிக் பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்!…இதுதானா!… வைரல் வீடியோ இதோ…
பிக் பாஸ் வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடிய அசிமுக்கு பிக் பாஸ் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்களே மீதம் உள்ளனர். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை நிரூபிக்கும் வண்ணம் மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்று ஆயிஷா, ராம் வெளியேற்றப்பட்டனர்.
இதை தொடர்ந்து இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் பிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போகும் போட்டியாளர் யார்? இன்றைய எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதை தொடர்ந்து இந்த வீட்டில் ஒரு முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுபவர் அசிம்.
இவர் யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவர் தனது விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார். இதன் மூலம் மக்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்துள்ளார் . தற்பொழுது இவர் தனது பிறந்த நாளை பிக் பாஸ் வீட்டில் கொண்டாடியிருந்தார்.
இவருக்கு அவரது தம்பியும் நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதனை பிக் பாஸ் அஸீமுக்கு சர்ப்ரைஸ் ஆக ஒளிபரப்பு செய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ இந்த வீடியோ….
View this post on Instagram