Categories: சினிமா

‘எப்படி தான் இப்டிலாம் பேச முடியுதோ’.. தனது மருமகள் கீர்த்தி குறித்து பேசி வருத்தப்பட்ட அசோக் செல்வனின் அம்மா..

Spread the love

நடிகர் அசோக் செல்வன், தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களால் ஒருவராக வலம் வருபவர். ஓ மை கடவுளே படத்தில், விரும்பாத மனைவியுடன் வாழும் கணவர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலித்து நடித்திருப்பார். சமீபத்தில் ஆக்‌ஷன் திரில்லர் படமான போர்த்தொழில் படத்தில், மிக பக்குவப்பட்ட ஒரு நடிப்பை அசோக் செல்வன் தந்திருப்பார். சமீபத்தில்தான் நடிகர் அருண்பாண்டியனின் மகள், நடிகை ரம்யா பாண்டியனின் சகோதரி, கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துக்கொண்டார். அசோக் செல்வன் மிகவும் சிவப்பாக உள்ள நிலையில், அவரது மனைவி கீர்த்தி பாண்டியனின் நிறம் குறித்து சிலர் விமர்சித்து பேசியுள்ளனர்.

இதுகுறித்து அசோக் செல்வனின் தாயார், கீர்த்தி பாண்டியனின் மாமியார் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, எப்படி என் மருமகள் கீர்த்தி குறித்து இவர்கள், இப்படி மோசமாக பேசுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. அவள் நிறம் ஒரு பொருட்டே அல்ல. அவளது நல்ல குணம். மனசு இப்படி எத்தனையோ உயர்ந்த குணங்களை அவளிடம் பார்க்க முடியும். இதை பற்றி படித்தால், அசோக் செல்வன் வருத்தப்படுவான் என புரியாமல், கண்டதையும் எழுதுகின்றனர். ஒருவர் பற்றி டிஸ்கசன் செய்வது தவறு என்று கூட அவர்களுக்கு புரியவில்லை. கவிஞர் வைரமுத்து சொன்ன கவிதை போல, ஊர்வாயை மூடுவது கஷ்டம். உன் செவிகளை மூடிக்கொள்வது சுலபம் என்பதை நான் பின்பற்றுகிறேன்.

அசோக் செல்வன், 10ம் வகுப்பு படிக்கும்போது எந்நேரமும் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருப்பான். அதனால், மிகவும் கருத்து நிறம் மங்கி போய்விட்டான். இப்படி ரசகுல்லா மாதிரி இருந்த பையன் குலோப்ஜாமுன் மாதிரி மாறிவிட்டாயே என்றால், இரண்டுமே இனிப்புதானம்மா என்பான். கிரவுண்டில் வெயிலில் விளையாடாமல் அப்புறம் எப்படி உன் பையன் கிரிக்கெட்டில் ஜெயிக்க முடியும் என்று கேட்பான். அவனுக்கு நிறம் பற்றி பேசினாலே எப்போதும் பிடிக்காது. ஏதாவது பங்க்‌ஷன் போயிட்டு வந்தால், அந்த பெண் அழகு, சிவப்பாக இருந்தாள் என்று வாய்தவறி கூறிவிட்டால் கூட, வெள்ளையாக இருப்பதை மட்டுமே ஏம்மா அழகாக நினைக்கிறீர்கள் என என்னிடம் வாக்குவாதம் செய்வான். ஒரு பேச்சுக்கூட நிறத்தை உயர்வாக பேசக்கூடாது என்பான், என்று அசோக் செல்வனின் அம்மா இதில் கூறியிருக்கிறார்.

admin

Recent Posts

மதுரைக்கு போக 31 ஆயிரமா?… பிளைட் டிக்கெட் விலையை கேட்டு மயக்கமே வந்துடும் போல.. விண்ணை முட்டும் டிக்கெட் விலையால் மக்கள் அதிர்ச்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…

3 seconds ago

கல்யாணத்திற்கு NO சொன்ன தாய்…. டிரம்மிற்குள் பிணமான 11 வயது மகன்…. மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…

3 minutes ago

BIG BREAKING: தமிழகத்தில் தேர்தல் நிறுத்தம்?…. கடைசி நேர பரபரப்பு…. சற்றுமுன் பதற்றம்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…

4 minutes ago

“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்கதான் காரணம்…” செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாய்ச்சல்…!!

கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…

18 minutes ago

“தந்தை இறந்த செய்தி கேட்டு கதறிய தருணம்”… கலைஞர் போட்ட ஒரே ஒரு கண்டிஷன்… மேடையிலேயே கண் கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…

18 minutes ago

நாளைக்கு டிக்கெட் எடுக்காதீங்க!… ஏப்ரல் 23 இலவச பேருந்து பயணம்…. தமிழக அரசின் ஸ்பெஷல் கிப்ட்.. யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்?

தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…

23 minutes ago