விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா இருந்த நிலையில் கடந்த வாரம் மஞ்சரி மற்றும் ராணவ் ஆகியோர் வெளியேறினர். இந்த வாரத்தின் ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது. வீட்டை விட்டு வெளியேறி போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களுடைய ஆட்டம் வெறித்தனமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் எதையுமே மாற்றவில்லை.
இந்த நிலையில் இந்த வாரம் டபுள் எலிமினேஷனில் முதல் நபராக அருண் வெளியேறியுள்ளார் . அதனை அடுத்து இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி கையில் எவிக்ஷன் கார்டோடு வருகிறார். யாராக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில் தற்போது எதிர்பாராத விதமாக தீபக் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…