தன்னுடைய அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அர்ஜுனின் இளைய மகள்… இணையத்தில் வைரலாகும் பதிவு…

By Begam

Updated on:

90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று வரையில் தமிழ் சினிமாவில் பிஸியாக காணப்படுகிறார் நடிகர் அர்ஜுன்.இவர் தற்பொழுது நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார். அவ்வப்பொழுது  வில்லன் கதாபாத்திரத்திலும் அசத்தி வருகிறார்.

   

நடிகர் அர்ஜுனன் குடும்ப வாழ்க்கையை பற்றி பார்க்கும் போது கன்னட நடிகையான  நிவேதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரது இரண்டாவது மகளான அஞ்சனா பழ தோளிலிருந்து தயாரிக்கப்படும் ஹாண்ட்பேக்குகளை உலகிலேயே முதன்முறையாக ஹைதராபாத்தில் தயாரித்து வருகிறார்.இந்த ஹேண்ட்பேக்கை விற்பனை செய்ய ‘சர்ஜா’ என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

தற்பொழுது நடிகர் அர்ஜுன் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் ஹரால்டு தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் கேரக்கடரை ரிவீல் செய்யும் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது. இந்த வீடியோவில் இது வரை பார்க்காத மிரட்டலான வகையில் அர்ஜுன் காணப்படுகிறார். தற்பொழுது தன்னுடைய அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அர்ஜுனின் இளைய மகள்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Arjun (@aishwaryaarjun)