உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோன் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஆப்பிள் நிகழ்ச்சியை நேற்று இரவு நடைபெற்ற நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் வெளியானது. ஆப்பிளின் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன் 4th ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஐபோன் 16 மாடலில் 6.1 இன்ச் திரை கொண்டுள்ளது. ஐபோன் 16 ப்ளஸ் மாடலில் 6.7 இன்ச் திரை வெளியாகி உள்ளது. ஏ 18 பிராசசர், 48 மெகாபிக்சல் உடன் கூடிய மெயின் கேமரா, 12 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா ஒயிட் கேமரா, டைப் சி சார்ஜிங் போர்ட் என அசத்தல் அப்டேட்டுகள் இந்த மாடலில் உள்ளன. கருப்பு, வெள்ளை மற்றும் டைட்டானியம் என மொத்தம் ஐந்து வண்ணங்களில் இந்த வெளியாகி உள்ளது.
இந்த மாடல் போன்களின் ஃப்ரீ ஆர்டர் விரைவில் தொடங்கும். செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஃப்ரீ ஆர்டர் இந்தியாவில் தொடங்குகிறது. இந்திய சந்தையில் ஐபோன் 16 மாடல் போன் ரூ.79,000 ஆக இருக்கும். . ஐபோன் 16 பிளஸ் மாடல் போன்கள் ரூ.89,900-விலையிலும் ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,000-ஆக நிர்ணயிகப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திம் ப்ரீமியம் மாடலான 16 ப்ரோ மேக்ஸ் மாடல், இந்திய சந்தைகளில் ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 900 ஆக இருக்கும்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…