அதிமுகவுடன் கூட்டணி… “ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திரும்பிய மாமியார்”… எடப்பாடியிடம் தஞ்சம் புகும் லீமா ரோஸ் மார்ட்டின்… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்….!

Spread the love

பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியும், இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) முன்னாள் இணை பொதுச் செயலாளருமான லீமா ரோஸ் மார்ட்டின், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக அக்கட்சியில் பணியாற்றி வந்த அவர், சில கசப்பான அனுபவங்கள் மற்றும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற காரணத்தினால் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நீண்ட காலமாகவே அதிமுகவில் இணைய வேண்டும் என்ற விருப்பம் லீமா ரோஸ் மார்ட்டினுக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியது. 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் அவர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ள தகவலும் தற்போது கசிந்துள்ளது.

இந்த அரசியல் மாற்றத்திற்குப் பின்னால் ‘மருமகன்’ ஆதவ் அர்ஜுனாவுடனான கருத்து வேறுபாடு ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் செயல்பாடுகள் லீமா ரோஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக அரசியல் களத்தில் வலுவான நிலைப்பாட்டை எடுக்கவே அவர் அதிமுகவைத் தேர்ந்தெடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு அரசியல் துருவங்களில் இயங்குவது விமர்சனங்களை எழுப்பினாலும், லீமா ரோஸின் இந்த நகர்வு அதிமுகவிற்கு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அவர் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைவார் என்றும், தேர்தல் களத்தில் தீவிரமாகச் செயல்படுவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

5 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

5 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

5 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

6 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

6 மணத்தியாலங்கள் ago