“ஒன் லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்”… டெல்லியிலேயே அண்ணாமலையை லாக் செய்த மேலிடம்… கசிந்த அதிர்ச்சி பின்னணி…!

Spread the love

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சி தொடங்கும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த சில நாட்களாக டெல்லியிலேயே முகாமிட்டுள்ள அவர், பாஜகவின் அகில இந்திய மேலிடத் தலைவர்களைச் சந்தித்து தனது ராஜினாமா முடிவை நேரடியாகத் தெரிவித்துள்ளார். பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஆனால், அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்துள்ள டெல்லித் தலைமை, அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

பாஜகவில் அவருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித் தருவதாகவும், தமிழகத்தில் முழு சுதந்திரத்துடன் செயல்படுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகவும் மேலிடத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். எனினும், அண்ணாமலை தனது முடிவில் மிகவும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இது ஒரு இரவில் எடுக்கப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான முடிவு அல்ல என்றும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சொந்தக் கட்சித் தொடங்குவது குறித்து அவர் தீர்க்கமாக ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இன்று அவரது பிறந்தநாள் என்பதால், புதிய கட்சி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமாதானப் பேச்சுகளுக்காக அவர் டெல்லியிலேயே தங்கியுள்ளார்.

இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் அண்ணாமலையின் நீண்ட நாள் அரசியல் அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்குப் பதிலாக பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கடந்த 18 மாதங்களாக அவர் போராடி வந்துள்ளார். ஆனால், அவரது கருத்தை தேசியத் தலைமை ஏற்காமல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இதன் விளைவாக, கடந்த முறை பெற்ற 4 எம்.எல்.ஏக்கள் என்ற எண்ணிக்கை தற்போது ஒன்றாகக் குறைந்துவிட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 2021-ல் வெறும் 3 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு வங்கியை, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனது தலைமையிலான கூட்டணியின் மூலம் 11 சதவீதமாக உயர்த்திக் காட்டியும், அந்த நேர்மறை வளர்ச்சியைச் சட்டசபைத் தேர்தலில் டெல்லி தலைமை சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்பது அவரது பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

அண்ணாமலையின் இந்த திடீர் ராஜினாமா முடிவைத் தொடர்ந்து, தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அவசரமாக டெல்லி விரைந்துள்ளார். அங்கு மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், நிதின் நபின் மற்றும் அமித்ஷா ஆகியோரைச் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார். அண்ணாமலையை எப்படியாவது சமாதானம் செய்து கட்சியில் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே பாஜக மேலிடத்தின் இறுதிக்கட்டத் திட்டமாக உள்ளது. இருப்பினும், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தனிப் பாதையில் பயணிக்க அண்ணாமலை உறுதியாக இருப்பதால், டெல்லி தலைமையின் சமாதான முயற்சிகள் பலனளிக்குமா அல்லது தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பம் ஏற்படுமா என்பது அடுத்த சில தினங்களில் தெரிந்துவிடும்.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

6 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

7 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

7 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

7 மணத்தியாலங்கள் ago