சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய திமுக ஆதரவாளரான ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு பல பெண்களிடம் தவறாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது. ஞானசேகரன் மீது ஏராளமான கட்டப்பஞ்சாயத்து, திருட்டு உள்ளிட்ட புகார்கள் வெளியானது. இதனால் அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டது எதிர்த்து அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் ஞானசேகருக்கு குண்டாஸ் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…
தமிழகத்தின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) இன்று (மே 10, 2026) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றார்.…
சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவுகளைத் தனது அதிரடி பேட்டிங்கால் உயிர்ப்புடன் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், 'CMO Tamil Nadu' என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக…