விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மக்களால் அதிகம் பேசப்படும் ஷோவாக பிக் பாஸ் சீசன் 7 இருந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து அண்டாகாகசம் 2 ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோவில் விளையாட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களான விசித்ரா, தினேஷ் என பலர் கெஸ்டாக வந்திருக்கின்றனர்.
இந்த ஷோவில் இரண்டு டீம்களாக பிரிந்து அங்கு வைக்கப்படும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவது எந்த டீம் அவர்களுக்கே பரிசு வழங்கப்படும். இதில் விசித்ராவுக்கு எதிர் டீமாக தினேஷ் கலந்து கொள்வார் என ஏற்கனவே விசித்ராவிடம் ஷோ உறுப்பினர்கள் சொல்லியிருந்த நிலையில் விசித்ரா தினேஷ் என்னோட டீம்ல் தான் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததாக கூறப்படுகிறது.
அவரை எவ்வளவோ சமாதானம் செய்த நிலையிலும் பலன் இல்லை என்று ஷோ தயாரிக்கும் டீம் கூறியிருந்தனர். இது பற்றி தினேஷிடம் கேட்டபோது தினேஷ் மறுத்துவிட்டார்; ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மிகவும் தவறாக பேசியதால் அவருடன் இணைந்து எனக்கு இந்த சோவில் விளையாட விருப்பமில்லை என்று தெளிவாக தெரிவித்தார்.
விசித்ராவுடன் இணைந்து விளையாட தினேஷ் மறுத்த நிலையில் விசித்ரா சோ தயாரிக்கும் டீமிடம் சண்டை போட்டு கிளம்பி சென்றுவிட்டார். இது fun ஷோ; இதில் டீம் என்பது முக்கியமில்லை சும்மா மக்களின் பொழுது போக்கிற்காக நடைபெறுகிறது என்று எவ்வளவோ டீம் உறுப்பினர்கள் கூறிய போதிலும் அதை ஏற்க மறுத்தார் விசித்ரா.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…
வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…
சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…
தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…
சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…