திருவள்ளூர் மாவட்டம், பெரிய நொளம்பூர் சித்தார்த் நகரைச் சேர்ந்த மூதாட்டி மேரி என்பவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்ற முதியவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த ஏழுமலை, நேற்று இரவு மேரி வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மூதாட்டி மேரி சத்தமாகக் கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் அவர் வீட்டிற்கு விரைந்துள்ளனர். மக்கள் வருவதை அறிந்த ஏழுமலை, தான் செய்ததை மேரி சொல்லிவிடுவார் என்ற அச்சத்தில், அருகிலிருந்த கல்லை எடுத்து மூதாட்டியின் தலையில் தாக்கி, தரையில் அடித்துக் கொலை செய்துள்ளார்.
வெளியே மக்கள் கூடியதால், ஏழுமலை வீட்டிற்குள்ளேயே மறைந்திருந்துள்ளார். பின்னர், வெளியேற முயன்றபோது அங்கிருந்த பொதுமக்களால் பிடிபட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். உள்ளே சென்று பார்த்த பொதுமக்கள் சுயநினைவு இழந்த நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதுடன், முதியவர் ஏழுமலையைக் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டதை மறைப்பதற்காக, பாலியல் சீண்டலைத் தொடர்ந்து மூதாட்டி அணிந்திருந்த கவரிங் நகைகளைத் திருடி வைத்திருந்தது தெரியவந்தது. இந்தக் கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…
தங்கம் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சாமானிய மக்கள் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க 'கோல்ட் பீஸ்' (Gold…