குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 14 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கணித ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள மதர் தெரசா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மோகித் டாங்க் என்பவர், கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறி இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஆரம்பத்தில் வகுப்பறையிலேயே மாணவியிடம் ஆசிரியர் அத்துமீறி நடந்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னிடம் நெருக்கமாக இருந்தால் நல்ல மதிப்பெண்கள் தருவதாகக் கூறி, அந்த மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு காலை சுமார் 8.30 மணியளவில் அந்தச் சிறுமியை மீண்டும் பள்ளிக்கு அருகிலேயே அவர் இறக்கிவிட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் நடந்து சுமார் 8 மாதங்கள் கழித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் நடந்த அனைத்தையும் கூறி கதறி அழுதுள்ளார். இதன் பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக சிறுமியின் தாய் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மோகித் டாங்கை கைது செய்துள்ளனர். தற்போது இது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ராஜாஜிபுரம் பகுதியில், பைக் ஓட்டிச் சென்ற சீருடை அணிந்த நபர் ஒருவர் மீது அங்குள்ள…
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவியாபாரி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திலுள்ள ராணி பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.…
விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் அரசியல் கட்சித் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பேச்சுக்கள்…
நடிகை த்ரிஷா, மூத்த நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். சாதாரணமாகப்…
இந்தியத் திரையுலகின் முன்னணி மூத்த நடிகரும், சமூக ஆர்வலருமான நானா படேக்கர் (75) கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென…
டெல்லி அசோகா ஹோட்டல் வளாகத்தில் உள்ள 'SOHO' கிளப்பிற்கு வெளியே, அக்டோபர் 4-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நாகாலாந்தைச்…