Categories: சினிமா

அம்மன் பட வில்லன் நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா?.. கடைசி காலத்துல சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் உயிரிழந்த சோகம்..!

Spread the love

பொதுவாகவே திரைத்துறை என்பது ஒரு கானல் நீர் என்பது ஒரு சில பிரபலங்களுக்கு அப்படியே பொருந்தும். சினிமாவில் கொடி கட்டி பறந்த பிரபலங்கள் சிலர் கடைசி காலத்தில் வாழ்வதற்கே மிகவும் சிரமப்பட்டு இறந்து போய் உள்ளனர். அதில் சாவித்திரி மற்றும் சந்திரபாபு போன்ற நடிகர் நடிகைகளும் அடங்குவார்கள். இவர்களைப் போல சினிமாவில் பல திரைப்படங்களில் தன்னுடைய கட்டு மஸ்தான் உடலை காட்டி சொட்டை தலையுடன் பார்வையாலேயே 90ஸ் கிட்ஸ்களை மிரட்டியவர் தான் நடிகர் ராமிரெட்டி. அம்மன் திரைப்படத்தில் இவர் சொல்லும் ச, சண்டா என்ற வார்த்தையை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் என்றாலும் இவருடைய சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் சித்தூர் தான். முதலில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி அதன் பிறகு தான் சினிமாவிற்கு வந்தார். சினிமா வாய்ப்பு தேடி தெலுங்கு திரைப்பட கம்பெனிகளுக்கு ஏறு இறங்கிய சமயத்தில் இவருக்கு தெலுங்கில் அனுஷம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி திரை உலகில் பிரபலமானார். தமிழில் நாடு அதை நாடு என்ற திரைப்படத்தில் தான் இவர் முதல் முதலில் நடித்திருந்தார்.

ஆனால் இவர் பிரபலமானது அம்மன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான். இதனைத் தொடர்ந்து துள்ளித் திரிந்த காலம் மற்றும் நெஞ்சினிலே ஆகிய திரைப்படங்களில் மட்டுமே தமிழில் நடித்தார். பிறகு ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஒரு நடிகராக தன்னுடைய வெற்றியை திரை உலகில் பதிவு செய்திருந்தாலும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இவர் எடுத்த மற்றும் தயாரித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தான் சந்தித்தது.

பிறகு தனது உடல் நலத்திலும் இவர் சில பிரச்சனைகளை சந்தித்தார். அதாவது தன்னுடைய இறுதி நாட்களில் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் கல்லீரல் பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இவர் மிகவும் உடல் மெலிந்து ஆளை அடையாளம் தெரியாமல் மாறி 52 வயதில் காலமானார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டி கலக்கிய இவர் கடைசி காலத்தில் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் உயிரிழந்த சோகம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

2 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

2 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

2 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

3 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

3 மணத்தியாலங்கள் ago