பாஜகவின் அதிகாரப்பூர்வ அழைப்புகளை நடிகர் விஜய் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாகத் தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யை இணைக்க பாஜக மேலிடம் பலகட்டத் திட்டங்களைத் தீட்டியதாகவும், அதன் ஒரு பகுதியாக அமித்ஷா நேரடியாகவே ஒரு ‘மெகா டீலிங்’ குறித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் பெரும் தொகையிலான தேர்தல் நிதி உதவி, ஆட்சி அமைக்கும் பட்சத்தில் துணை முதல்வர் பதவி மற்றும் சில முக்கிய அரசியல் வாக்குறுதிகள் அந்தப் பேரத்தில் முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுவதால், அவரைத் தங்கள் பக்கம் இழுக்க டெல்லி மேலிடம் அதீத ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், பாஜகவின் இந்த வசீகரப் பேரங்களுக்கு விஜய் கிஞ்சித்தும் செவிசாய்க்கவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகளை அறிவித்த போதே, பாஜகவை ‘கொள்கை எதிரி’ எனத் பகிரங்கமாகத் தோலுரித்துக் காட்டிய விஜய், அமித்ஷாவிடம் தனது முடிவை மிக உறுதியாக ‘நோ’ என்று கூறி மறுத்துவிட்டதாகப் பேசப்படுகிறது. திராவிட மண்ணில் மதவாத அரசியலுக்கு இடமில்லை என்பதில் தெளிவாக இருக்கும் விஜய், எந்தச் சூழலிலும் தனது அடிப்படை நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…