என்னப்பா அங்க சத்தம்.. ஆக்‌ஷனில் இறங்கிய அமித்ஷா… இபிஎஸ்-க்கு காத்திருக்கும் புதிய தலைவலி…. பரபரக்கும் அரசியல் களம்..!

Spread the love

கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கட்சி பிளவுபடும் நிலைக்குச் சென்றது. குறிப்பாக, சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்த விவகாரம் இந்த பிளவை மேலும் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்களின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டதோடு, இரு தரப்பும் சபாநாயகரைச் சந்தித்து ஒருவருக்கொருவர் எதிராக மனு அளிக்கும் அளவிற்கு நிலைமை முற்றியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக இரு அணிகளுக்கும் இடையே தீவிர சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. ஆரம்பத்தில் பறிக்கப்பட்ட பொறுப்புகளை மீண்டும் வழங்க எடப்பாடி பழனிசாமி மறுத்தபோதிலும், பின்னர் மாவட்ட செயலாளர் பொறுப்புகளை பிரித்து வழங்குவது உள்ளிட்ட சில சமரச திட்டங்களுக்கு இபிஎஸ் தரப்பு சம்மதித்தது. இருப்பினும், வேலுமணி தரப்பு உடனடியாக இறங்கி வரவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, டெல்லி தரப்பிலிருந்து வந்த அழுத்தமே இந்த இணைப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி தலையீடு தான் இந்த சமரசத்திற்குப் பின்னால் இருந்ததாகக் கூறப்படுகிறது. “முன்னாள் முதலமைச்சராக இருந்த ஒருவரே இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசும்போது, பிடிவாதம் பிடிப்பது சரியான அரசியல் அணுகுமுறை அல்ல” என்று அமித் ஷா தரப்பிலிருந்து வேலுமணி அணிக்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. டெல்லியின் இந்த சமிக்ஞைக்குப் பிறகே வேலுமணி தரப்பு சமாதானத்திற்கு முன்வந்தது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் இந்த சமரசப் பேச்சுகளில் முக்கியப் பங்காற்றினர்.

இருப்பினும், இந்த இணைப்பு அதிமுகவின் அனைத்து தலைவர்களையும் திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் தற்போதைய கள நிலவரம். குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் மற்றும் அருண்மொழித்தேவன் ஆகியோர் இன்னும் இபிஎஸ் தலைமையுடன் இணக்கமான சூழலுக்கு வரவில்லை. சட்டமன்றக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதல்களால் அதிருப்தியடைந்த சி.வி.சண்முகம், ஒருகட்டத்தில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யக்கூட ஆலோசித்தார். ஆனால், குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களின் வலியுறுத்தல் காரணமாக தற்போதைக்கு அவர் எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.

மறுபுறம், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் நகர்வுகள் அதிமுகவில் புதிய புயலைக் கிளப்பியுள்ளன. தேர்தலுக்கு முன்பே அதிமுக – தவெக கூட்டணி அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், அது நடக்காததால் கடும் அதிருப்தியில் இருந்தார். தற்போது புதுக்கோட்டை மற்றும் விராலிமலைப் பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வரும் அவர், தவெக நோக்கி நகரக்கூடும் என்ற யூகங்கள் வலுவாக எழுந்துள்ளன. எஸ்.பி.வேலுமணி அணி இபிஎஸ்-உடன் கைகோர்த்தாலும், சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளே அதிமுகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் கேள்விகளாக உருவெடுத்துள்ளன.

Nanthini

Recent Posts

அதிர்ச்சி… அடர்ந்த காட்டில் 6 நாட்கள் மாயமான 17 வயது சிறுவன்… ஹெலிகாப்டர் கேமராவில் சிக்கி மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்…!!

நவம்பர் 6 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வல்ஹல்லா அருகே உள்ள காட்டில், தனது சகோதரருடன் முகாம் இட்டிருந்த…

11 minutes ago

வேலையை விடுங்க… நீங்க முதலாளி ஆகுங்க… தோத்துட்டா திரும்ப இங்கே வாங்க… ஊழியர்களை அதிர வைத்த… பெங்களூரு நிறுவனத்தின் மெகா ஆஃபர்…!

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…

20 minutes ago

ஐயோ… குழந்தையை என்கிட்ட கொடுங்க… நடுவானில் விமானப் பணியாளர் செய்த காரியம்… அதிர்ச்சியில் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…

29 minutes ago

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

13 மணத்தியாலங்கள் ago