#image_title
பிரபல நடிகையான அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் அமலா பாலுக்கு புகழைத் தேடித் தந்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் மைனா திரைப்படத்திற்கு பிறகு தான் அமலாபால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர ஆரம்பித்தார்.
அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் விஜயுடன் தலைவா, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி என ஏராளமான முன்னணி நடிகர்களின் படத்தில் அமலா பால் நடித்துள்ளார். 2014-ஆம் ஆண்டு இயக்குனர் விஜயை அமலா பால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
அதன் பிறகு மீண்டும் படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் அமலா பால் தனது நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அடுத்த சில மாதங்களிலேயே தன் கர்ப்பமாக இருப்பதை அமலாபால் அறிவித்தார். கர்ப்ப காலத்தில் அமலாபால் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இலை என பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் முதல் முறையாக அமலாபால் தனது குழந்தை மற்றும் கணவருடன் போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனது குழந்தையின் முகத்தை முதன் முதலாக சோசியல் மீடியாவில் காண்பித்துள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.
ராய்ப்பூர் டீடீ நகர் பகுதியில் வீட்டின் வெளியே தனது குழந்தையைக் கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்த நபர் மீது, அப்பகுதியில்…
டெஹ்ராடூனின் விஜய் காலனியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண், புதன்கிழமை அன்று நீதிமன்றக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்த…
அவளஹள்ளியில் உள்ள ஒரு யூனிசெக்ஸ் சலூன் உரிமையாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி,…
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…