வரலாற்றுப் சிறப்புமிக்க ஜார்ஜ் கோட்டையிலிருந்து முதல்வர் அறை மாற்றம்…. ரூ.6.17 கோடி நிதி ஒதுக்கீட்டின் மர்மம் என்ன?…. வெளிவந்த சீக்ரெட்….!

Spread the love

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் முதலமைச்சர் அலுவலகத்தை, அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ரூ.6.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்குத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. இதற்கான உட்கட்டமைப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்கும் பொருட்டு, பொதுப்பணித்துறை சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் குறுகிய கால டெண்டர் கோரப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றப் பணிகளுக்காக, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் இயங்கி வந்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை (DIPR) சார்ந்த பல முக்கியப் பிரிவுகள் உடனடியாக காலி செய்யப்படுகின்றன. குறிப்பாக வரவு செலவுப் பிரிவு, பொருட்காட்சி அனுமதிப் பிரிவு, முதலமைச்சரின் சமூக ஊடகப் பிரிவு (CMO Social Media), செய்தித்துறைக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் செய்தித்துறை இயக்குநர் அருள், மூத்த அலுவலர்கள் பாஸ்கரன், இரவிச்சந்திரன், அ.வே. சுரேந்திரன், த. கலைச்செல்வன் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் அறைகள் அனைத்தும் அங்கிருந்து மாற்றப்படுகின்றன.

இவ்வாறு காலி செய்யப்படும் செய்தித்துறையின் அலுவலகப் பிரிவுகள் அனைத்தும், சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் தரைத்தளம் (500 சதுர அடி), இரண்டாம் தளம் (400 சதுர அடி) மற்றும் மூன்றாம் தளத்திற்கு (2000 சதுர அடி) தற்காலிகமாக மாற்றப்பட உள்ளன. முதலமைச்சர் அலுவலகத்திற்குத் தேவையான நவீன பாதுகாப்பு வசதிகள், கூட்ட அரங்குகள் மற்றும் நவீன உள்கட்டமைப்புகளுடன் கூடிய புதிய அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியில் விரைவில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

1.5 வயது குழந்தையை தாக்கி 25-வது மாடியிலிருந்து வீசிய 10 வயது சிறுமி…! லிப்டில் நடந்த கொடூரம்…. இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…

51 seconds ago

“என் கண் முன்னாடியேவா?!”… மகளின் வீட்டில் நடந்ததை பார்த்து கொந்தளித்த தந்தை… நொடியில் முடிந்த 24 வயது இளைஞரின் உயிர்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…

12 minutes ago

பெற்றோர்களே உஷார்… குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்… அதிவேக பைக் மோதி பறந்த சைக்கிள்… நொடியில் நேர்ந்த விபரீதம்…!!

பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…

22 minutes ago

ஐயோ கடவுளே… ஒரு செகண்ட்ல எல்லாம் போச்சே… காதலன் கண்முன்னே ஏழாவது மாடியிலிருந்து… கீழே விழுந்த இரண்டு குழந்தைகளின் தாய்… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…

40 minutes ago

அதிர்ச்சி… பட்டப்பகலில் அரங்கேறிய குண்டாந்தடி தாக்குதல்… நீதியை மூடி மறைக்கிறதா காவல்துறை?… ஆக்ராவை உலுக்கும் அரசியல் அராஜகம்…!

ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…

56 minutes ago

திக் திக் திக்… பேக்கரிக்குள் புகுந்து செக்யூரிட்டியை.. கைகால் கட்டி கடத்தி 2 லட்சம் கொள்ளை… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…

1 மணத்தியாலம் ago