தமிழகத்தின் எப்போதும் விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு ஒரே குஷி தான். காலாண்டு விடுமுறை 9 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் அரையாண்டு விடுமுறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் டிசம்பர் 23 அதாவது நாளை அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு முடிவடைகிறது.
இதனை தொடர்ந்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை மொத்தம் 12 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் அடங்கும். தொடர்ந்து 12 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் அதனை குடும்பத்தோடு கொண்டாட பலரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட தயாராகி வருகிறார்கள்.
இதனால் முன்னதாகவே பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்வது நல்லது. அதே சமயம் அரையாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு அரசு சார்பிலும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23 முதல் டிசம்பர் 25 வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பிற ஊர்களுக்கு சுமார் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசல் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு செல்ல www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC செயலியில் இப்போதே டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு…
சூரத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனக்குத் திருமணத்திற்காகப் பெண் தேடி வந்த நிலையில், 'Shaadi.com' இணையதளம்…
ஆறு பச்சிளம் குழந்தைகளைத் தவிக்கவிட்டுத் தனது காதலனுடன் ஓடிப்போன ஒரு பெண், "கணவன் வயதாகிவிட்டார், காதலன் தான் எனது ஆசைகளைப்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராகப்…
பிரேசிலில் ஒரே நேரத்தில் இருவேறு தந்தைகளுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் குறித்த செய்தி தற்போது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 19…
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பயணி ஒருவருக்கு அவர் கனவிலும் நினைக்காத ஒரு விசித்திரமான…