Categories: CINEMA

அப்போ நட்டுமேல பாசம்லாம் இல்லையா? அடப்பாவமே! கிரிக்கெட் வீரர் நடராஜனை அஜித் சந்தித்ததின் உண்மை பின்னணி இதுதானாம்!

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது ஊரறிந்த விஷயம்தான். இத்திரைப்படம் அறிவித்ததில் இருந்தே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமா இல்லையா என்ற பயத்துடனே ரசிகர்கள் தென்பட்டார்கள்.

அஜித்குமாரும் படப்பிடிப்பை பற்றிய கவலையே இல்லாமல் தனது பைக்கை எடுத்துக்கொண்டு உலகச் சுற்றுலா செல்லத்தொடங்கினார். இது ரசிகர்களுக்கு மேலும் பீதியை கொடுத்தது. எனினும் ஒரு வழியாக “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 80 சதவிகிதத்திற்கும் மேலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது.

சமீபத்தில் கூட படக்குழுவினர் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் ஆரவ்வுடன் அஜித் கார் ஓட்டும்போது நடந்த எதிர்பாரா விபத்தை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தனர். எப்பொழுதுமே அஜித் திரைப்படங்களில் பைக் அல்லது கார் சம்பந்தப்பட்ட சாகச காட்சிகள் ஒன்றாவது இடம்பெற்றுவிடும். அந்த காட்சிக்காக அஜித் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மெனக்கெடுவார்.

அந்த வகையில் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடந்த விபத்து குறித்த வீடியோ வெளிவந்தது ரசிகர்களை சற்று அதிர்ச்சியடையத்தான் வைத்தது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாள் விழாவில் அஜித் கலந்துகொண்டு கேக் ஊட்டி சிறப்பித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். கிரிக்கெட் ரசிகர்களாலும் அஜித் ரசிகர்களாலும் இப்புகைப்படங்கள் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, கிரிக்கெட் வீரர் நடராஜனை அஜித் சந்தித்த பின்னணியை குறித்து பேசியுள்ளார்.

“கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாளில் அஜித் கலந்துகொண்டு கேக் ஊட்டுவது போன்ற புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். ஏதோ நடராஜனின் பிறந்தநாள் பார்ட்டிக்கே அஜித் கிளம்பிப்போய் கலந்துகொண்டார் என்று பலரும் நினைத்துக்கொண்டுவிட்டார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால், அஜித் ஒரு தனிப்பட்ட வேலையாக ஹைதராபாத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கே சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் இருந்திருக்கின்றனர். அன்றைய நாள்தான் நடராஜனுக்கு பிறந்தநாள் வந்திருக்கிறது. அஜித் ஹைதராபாத்தில்தான் இருக்கிறார் என்று தெரிந்துகொண்ட சன்ரைஸர்ஸ் குழுவினர் அஜித்தின் பிசியோதெரபி டாக்டரின் மூலம் தொடர்புகொண்டு அஜித்தை தொடர்புகொண்டிருக்கின்றனர். அஜித்தும் சரி என்று அப்பாய்ண்ட்மென்ட் கொடுத்திருக்கிறார். அதனை தொடர்ந்து நடராஜன் அஜித்தின் ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார். உண்மையில் நடந்தது இதுதான்” என்று பிஸ்மி அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Arun

Recent Posts

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

11 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

1 மணி நேரம் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

3 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago