Categories: சினிமா

ரெண்டு வருட காத்திருப்புக்கு வொர்த்தா?.. விடாமுயற்சி தெறிக்க விட்டதா?… படம் பார்த்த ரசிகர்கள் சொல்வது என்ன?

Spread the love

தமிழ் சினிமாவில் வெறித்தனமான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த நிலையில் ஆசை, காதல் கோட்டை, வாலி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகரானார்.

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வரும் நிலையில் “முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி” என்ற ஒரு ரசிகர் பதிவு செய்துள்ளார்.

ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு முன்பே வெளிநாடுகளில் படம் ரிலீஸாகி அங்குள்ள ரசிகர்கள் படத்தை முதல் காட்சியே பார்த்துவிட்டு விமர்சனங்களை சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அதில் பெரும்பாலானவை நேர்மறையான விமர்சனங்களாகவே வந்துகொண்டிருக்கின்றன. அப்படி வெளியான சில ரசிகர்களின் கருத்துகளைப் பார்க்கலாம்.

  • முதல் பாதியை விட இரண்டாம் பாதி அருமை. படத்தின் வெற்றிக்கு கண்டெண்ட்தான் முக்கியம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.  அஜித்துக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும். த்ரிஷாவின் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • படத்தை சிறப்பாகக் கொண்டு செல்கிறது அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும். அஜித்தின் முந்தைய படங்கள் போல இல்லாமல் வித்தியாசமாக உள்ளது.
  • சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் படங்களின் அளவுக்கு சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.கண்டிப்பாக தியேட்டரில் பாருங்கள். ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுக்கும்.
  • முழு அன்லிமிடெட் சாப்பாடு சாப்பிட்ட உணர்வு.
  • இது தேய்வழக்கான மசாலா படம் இல்லை. அழுத்தமான உணர்வுகளைக் கொண்ட திரைக்கதை. அதே நேரம் விறுவிறுப்பாகவும் இருந்தது.

என பாசிட்டிவ் விமர்சனங்களாகக் குவிந்து வருகின்றன. எனினும் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள்தான் பார்ப்பார்கள் என்பதால் நடிகர் மேல் ப்ரியத்தில் மிகைப்படுத்தி சொல்வதும் நடக்கும் என்பதால் அடுத்தடுத்த காட்சிகளில் இன்னும்  தெளிவான நிலை புரியும்.

vinoth

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

6 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

6 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

6 மணத்தியாலங்கள் ago