Categories: சினிமா

ரொம்ப ஸ்பெஷலான நாளில் வெளியாக இருக்கும் விடாமுயற்சியின் ஃபர்ஸ்ட் லுக்..இதற்காக முயற்சியை கைவிடாமல் காத்திருக்கும் ரசிகர்கள்..

Spread the love

நடிகர் அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான துணிவு படம் எச் வினோத் இயக்கத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு வெளியான நிலையில் படம் சூப்பர் ஹிட் அடித்தது. படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தனர்.

துணிவு படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படம் துவங்குவதில் தொடர்ந்து தாமதம் காணப்பட்டது. கடந்த மே மாதத்திலேயே இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் படம் தொடர்ந்து தாமதப்பட்டது. கடந்த ஆண்டு மே 1ம் தேதி ஆனா அஜித்தின் பிறந்தநாள் முன்னிட்டு மகிழ்ந்திருமே நீ இயக்கம் இப்படத்தின் பெயரான விடாமுயற்சியின் டைட்டில் காடை வெளியிட்டிருந்தார்கள். இதனிடையே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு படத்தின் பூஜை போடப்பட்டு அசர் பைஜானில் ஷூட்டிங் துவங்கப்பட்டது. அங்கும் தொடர்ந்து பணி மழை உள்ளிட்டவை ஏற்பட்ட நிலையில் ஷூட்டிங்கை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அடுத்து பட குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கை இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள படக் குழுவினர் அடுத்த மாதத்திற்குள் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கான வேலைகளில் இயக்குனர் மகிழ் திருமேனி தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஆக்ஷன் திரில்லராக உருவாக உள்ள இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். அசர் பைஜானில் நடத்தப்பட்ட சூட்டிங்கில் கார் சேசிங், ஆக்சன் காட்சிகள் உள்ளிட்டவை எடுத்து முடிக்கப்பட்டுள்ளன.

படத்தின் சூட்டிங் துவங்கி இரண்டு மாதங்களுக்கு மேலான நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இம்மாதத்தின் மத்தியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தை ஒட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அந்த நாளில் வெளியாகவில்லை என்றாலும் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் கண்டிப்பாக வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தடம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள மகிழ் திருமேனி அஜித்துடன் இணைந்துள்ள இந்த விடாமுயற்சி படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. படம் அஜித் கேரியரில் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக, மார்க் ஆண்டனி என்ற பக்கா கமர்சியல் சூப்பர் ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய ஏகே 63 படத்திற்காக அஜித் இணைய உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் தன்னை கமிட் செய்யவும் அவர் திட்டமிட்டு வருகிறார். அவரது இந்த முடிவு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ranjith Kumar

Recent Posts

இனி இதுதான் கதியா?… வெறிச்சோடி கிடந்த கவுண்டர்கள்… SBI கிளையில் காத்திருந்து நொந்துபோன மக்கள்… வாக்குவாதத்தால் பரபரப்பு…!!

வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…

4 minutes ago

காரணம் தெரிந்தால் ஷாக் ஆவீங்க!… இப்படியும் ஒரு காதலா?… நடுரோட்டில் காதலனுக்கு தண்ணி காட்டிய இளம்பெண்… ஸ்தம்பித்த நெடுஞ்சாலை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…

10 minutes ago

ரகசிய டீ பார்ட்டி… போட்டுக் கொடுத்த மர்ம நபர்… உணவகத்திற்குள் புயலென நுழைந்த மனைவி… கணவனுக்கும் தோழிக்கும் விழுந்த சரமாரி அடி…!!

சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…

16 minutes ago

இதயம் இன்னும் படபடக்குது… இருளில் நேரில் கண்ட திகில் காட்சி… ஆன்மாவையே நடுங்க வைத்த அந்த ஒரு நொடி… தீபாவளி அமாவாசை இரவில் நடந்தது என்ன?…!!

தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…

22 minutes ago

இப்படியொரு துணிச்சலா?… வாகனத்திலிருந்து பையை அபேஸ் செய்த மர்ம நபர்… சிக்கன் கடை வாசலில் நடந்த பகீர் சம்பவம்…!!

சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…

28 minutes ago

“Confident-ah இருங்க”-ன்னு சொன்னது குற்றவாளிகளுக்கா?… கள்ள மௌனத்தை கலைப்பாரா முதல்வர் விஜய்?… எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

47 minutes ago