#image_title
நடிகர் அஜித் காஸ்னியான பெராரி காரை வாங்கி இருக்கின்றார். இந்த காரின் விலை குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். அதைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் அஜித் விடாமுயற்சியின் படப்பிடிப்பு தற்போதுதான் முடித்தது.
இது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் முடிவடைந்து விரைவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை காட்டிலும் ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த படத்தை மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கின்றார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து உள்ள நிலையில் அடுத்த ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நடிகர் அஜித் ரெஸ்ட் கிடைக்கும்போது எல்லாம் பைக் ரேஸ் செல்வது வழக்கம். உலகில் பல நாடுகளுக்கு பைக் ரேஸ் சென்று வருவார். அவருக்கு பைக் மற்றும் கார்கள் மீது அதிக அளவு ஆசை இருக்கின்றது.
அதனால் வீட்டில் புது புது கார் மற்றும் பைக்குகளை வாங்கி அடுக்கி வைப்பார். காஸ்ட்லியான கார் பைக்குகள் என இவரிடம் ஏகப்பட்டது உள்ளது. அவரின் லிஸ்டில் லேட்டஸ்டாக ஒரு கார் இணைந்து இருக்கின்றது. அந்த கார் தான் ஃபெராரி எஸ்எப் 90 ஸ்ட்ரேடல் கார். இந்த காரை தற்போது சொந்தமாக வாங்கி இருக்கின்றார் அஜித்.
இந்த காரின் விலை 9 கோடி. இதில் இரண்டு பேர் மட்டும் தான் பயணிக்க முடியும் என்று கூறப்படுகின்றது. தனது காதல் மனைவி ஷாலினியுடன் ஜாலியாக செல்வதற்காக இந்த காரை நடிகர் அஜித் வாங்கியிருப்பதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் தெரிவித்து இருக்கிறார்கள். நடிகை ஷாலினிக்கு தற்போது தான் ஆபரேஷன் முடிவடைந்தது. தற்போது வரை அவர் மருத்துவமனையில் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறி வருகிறார்கள்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக ஆதரவளிப்பது குறித்து எடப்பாடி…
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…