சமீபத்தில் சில காலங்களுக்கு முன்பு Airtel Jio போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தை அதிக அளவில் உயர்த்தியது. இது மக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. ஆனால் இதுதான் கிடைத்த சந்தர்ப்பம் என நினைத்த BSNL சேவை கட்டணங்களை குறைத்தது. இதனால் நாட்டில் பல லட்சக்கணக்கான மக்கள் Airtel Jio நிறுவனத்தை விட்டு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சேர்ந்தனர்.
ஆனால் இந்த ஒரு சிரமத்தை மக்கள் எதிர்கொள்வதற்கு முன்பாகவே கடந்த நவம்பர் மாதம் TRAI ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதாவது Voice Call மற்றும் SMSகளுக்கான தனி ரீசார்ஜ் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு காலக்கெடு விதித்திருந்தது. அந்த வகையில் தற்போது Airtel ஜியோ போன்ற நிறுவனங்கள் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் களுக்கான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. தற்போது ஏர்டெல்லின் புதிய வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் கான ரீசார்ஜ் திட்டங்கள் என்னென்ன விலை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
இப்போது Airtel தான் நாட்டிலேயே முதன் முதலாக குரல் மற்றும் எஸ்எம்எஸ்கான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புது வகையான ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்று ரூபாய் 509 வவுச்சர். இது 84 நாட்கள் செல்லுபடி ஆகும். கால வரையறையற்ற குரல் அழைப்புகள் மற்றும் 900 இலவச எஸ் எம் எஸ் வழங்குகிறது. இந்த திட்டத்தில் முன்பு 6gb டேட்டா வழங்கியது. இப்போது அது அகற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நீண்டகால வேலிடிட்டிக்காக குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் களுக்கான திட்டமாக 365 நாட்களுக்கு ரூபாய் 1,999 என்பதை அறிமுகபடுத்தி இருக்கிறது. இதில் கால வரையறையற்ற குரல் அழைப்புகள் மற்றும் 3600 இலவச எஸ்எம்எஸ்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்த குரல் எஸ்எம்எஸ் ரீசார்ஜ் திட்டங்களில் அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பெர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் போன்ற கூடுதல் நன்மைகளுடன் வரக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Airtel இன் இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள் கொடுக்கப்பட்ட தரவுகளில் இருக்குமா அல்லது புதிய மாற்றங்கள் ஏற்படுமா என்பதை பற்றிய தகவல் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இது மக்களுக்கு எந்த அளவுக்கு பயன்படும், மக்கள் சிரமத்தை மேற்கொள்வார்களா அல்லது இதை விரும்பி ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…