அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் தொடர்ந்து வெளியேறி வருவதற்கு, பறிக்கப்பட்ட கட்சிப் பதவிகள் மீண்டும் தங்களுக்கு வழங்கப்படாததே முதன்மைக் காரணம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்தவர்களுக்கு, கடந்த ஜூன் 4-ஆம் தேதிக்குள் தகுந்த பதவிகள் மறுபடியும் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்திருந்ததாகவும், ஆனால் குறிப்பிட்டபடி பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
மாறாக, கட்சிக்காக மீண்டும் ஆரம்பப் புள்ளியிலிருந்தே உழைக்கத் தொடங்குங்கள் என்று அவர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட கடுமையான மனக்கசப்பு மற்றும் அதிருப்தியின் காரணமாகவே, சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் கட்சியை விட்டு வெளியேறும் முடிவை எடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சங்கர் ஏ. என்பவர், 2018-ஆம் ஆண்டு…
சென்னை வடபழனியைச் சேர்ந்த ஆதித்தன் - இலக்கியா தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று, ஒரு…
தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை உறைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அண்மையில் பெரும்…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அளித்து…
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'டோரதி' திரைப்படம்…