தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் அதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. அதன்படி ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இபிஎஸ்ஸுக்கு பின்னடைவாக அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவுக்கு தாவி வருகிறார்கள். மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான் என அதிமுகவிலிருந்து முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர். சொந்த ஊரில் மிகவும் செல்வாக்கு பெற்ற இவர்களின் வருகை திமுகவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பது உண்மைதான். அதேநேரம் புதிதாக இணையும் மாற்றுக் கட்சியினருக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் திமுகவினர் அதிர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஸ்டாலின் எடுக்க போக முடிவு என்ன என்பது குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…