“அந்த 5000 ரூபாயை வாங்கிட்டு, வாயில மண்ணை அள்ளிப்போடுவாங்க”… ஸ்டாலினை ‘அவன் இவன்’ என ஒருமையில் பேசிய அதிமுக MLA….!

Spread the love

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் அண்மையில் வழங்கப்பட்ட 5000 ரூபாய் சிறப்பு நிதியைக் கடுமையாக விமர்சித்து, கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி பேசியுள்ள கருத்துக்கள் தற்போது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஒருமையில் விமரிசித்ததோடு, இந்தத் திட்டத்தை மிகவும் கொச்சையான முறையில் ஒப்பிட்டுப் பேசினார்.

முதலமைச்சர் ஸ்டாலினை “அவன் இவன்” என்று ஒருமையில் பேசிய கிருஷ்ண முரளி, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றுவது குறித்து தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், “100 நாட்களை 125 நாட்களாக உயர்த்தும் துப்பு இல்லாத ஸ்டாலின், பெண்களுக்கு 5000 ரூபாய் வழங்கிவிட்டால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று கனவு காண்கிறார்” என சாடினார். முதலமைச்சரின் இந்த நடவடிக்கையை அவர் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் விமர்சித்தார்.

மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களைப் பற்றிப் பேசுகையில், அவர் பயன்படுத்திய “சிறுக்கி” என்ற வார்த்தை மற்றும் பெண்களைத் தரக்குறைவாகச் சித்தரிக்கும் விதமான பேச்சுகள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளன. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு வட்டிக்கடைக்காரனிடம் பணம் கொடுத்து ஏமாறுவது போன்ற கதையாக இந்த 5000 ரூபாய் உதவித்தொகை அமையும் என்றும், கோடை காலத்தில் ஜூஸ் குடிக்கத் தரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு மக்கள் திமுகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

இறுதியாக, “5000 ரூபாயை வாங்கிக்கொண்டு மக்கள் உன் வாயில் மண்ணை அள்ளிப் போடுவார்கள்” என்று முதலமைச்சரை நோக்கி அவர் கூறிய சாடல் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களையும் முதலமைச்சரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ-வின் இந்தப் பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்தும், சமூக ஆர்வலர்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

59 minutes ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

1 மணத்தியாலம் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

1 மணத்தியாலம் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

1 மணத்தியாலம் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

2 மணத்தியாலங்கள் ago