தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில், அதிமுக நகரச் செயலாளர் சிங். செல்வராஜ் என்பவர் ஒட்டியுள்ள ஒரு போஸ்டர் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் போஸ்டரில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை “முன்னாள் முட்டாள் முதலமைச்சர்” என்று கடுமையாக விமர்சித்துள்ள அவர், ஒரு குறிப்பிட்ட பண பாக்கி விவகாரத்தையும் பகிரங்கமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதற்காக, ஓ.பி.எஸ் தன்னிடம் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர பட்டுச்சேலைகளை ஆர்டர் செய்து வாங்கியதாக செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அந்தச் சேலைகளுக்கான பணத்தை இதுவரை தராமல் ஏமாற்றி வருவதாகவும், பலமுறை கேட்டும் அவரது தரப்பிலிருந்து முறையான பதில் இல்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விருது பெற்ற சோழன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவரான செல்வராஜ், தமக்குச் சேர வேண்டிய தொகையை மீட்பதற்காக இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்தப் போஸ்டரில் ஓ.பி.எஸ் தற்போது திமுகவில் இணைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள செல்வராஜ், “பணம் தருவதாகக் கூறி பட்டுச்சேலைகளை வாங்கிச் சென்றவர் இப்போது திமுகவிற்குச் சென்றுவிட்டார்; அவரிடமிருந்து அந்தப் பணத்தை இன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீட்டுத் தருவாரா?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். ஓ.பி.எஸ் கட்சி மாறிய சில நாட்களிலேயே, அதிமுக நிர்வாகி ஒருவரே பட்டுச்சேலை கடன் விவகாரத்தை முன்வைத்து போஸ்டர் ஒட்டியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
வி.எஸ். பாபு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்…
தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவரான கிரிபாலா சிங்கின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தமிழக அரசியல் களத்தில் இதுவரை கேள்விப்பட்டிராத 'குதிரை பேரம்' என்ற சொல், தற்போது பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்து அரசியல் சூட்டை அதிகரிக்கச்…
தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு அரசு சமீபத்தில் அறிவித்த அகவிலைப்படி உயர்வுத் தொகை, தற்போது ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக…
ரஷியாவின் வதுலினோ விமான நிலையத்தில் நடைபெற்ற ‘விா்போர்ட் ஃபோர்சஸ் டே’ கொண்டாட்டங்களின் போது ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்தது. சோவியத்…