தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது.
பாஜகவுடன் இ பி எஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு கெடு விதித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைய உள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தோப்பு வெங்கடாசலம் வரிசையில் அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் தன்னுடைய ஆதரவாளர்கள் 5000 பேருடன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாபெரும் விழாவை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. உட்கட்சி பூசல் காரணமாக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா , முன்னாள் எம்பி மைத்ரேயன் என அடுத்தடுத்து அதிமுக புள்ளிகள் திமுகவில் ஐக்கியமான நிலையில் K.A செங்கோட்டையன் விவகாரத்தால் கொங்கு மண்டலத்தை திமுக குறி வைத்துள்ளது.
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…