திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நபர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தரவுகளை சேகரித்து நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாச்சாமி பிறப்பித்த சுற்றறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவில், அறிக்கை அளிக்கத் தவறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. தேசிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை இலக்கு வைத்து இதுபோன்ற தகவல்களை அரசு இயந்திரத்தின் மூலம் திரட்ட உத்தரவிட்டது பெரும் கேள்விகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்தச் சுற்றறிக்கைக்குப் பல்வேறு அரசியல் தரப்புகளிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்க்கட்சியான அதிமுகவின் சமூக வலைதளப் பிரிவு வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரிக்க வட்டாட்சியர் உத்தரவிட்டிருப்பது ஜனநாயக அரசியலமைப்பின் மீதான கொடுங்கோல் தாக்குதல்” என கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், தேசியக் கட்சிகளான கம்யூனிஸ்ட் அமைப்புகளை ஏதோ தீவிரவாத இயக்கம் போல நடத்தும் பாணியில் இந்த அரசு செயல்படுகிறதா என்றும், பிரிட்டிஷ் காலத்து கைரேகை சட்ட பாணியில் தோழர்களைக் கையாள முயல்வது கண்டனத்திற்குரியது என்றும் அதிமுக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
கூட்டணிக் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை இறங்கியது. சர்ச்சைக்குரிய அந்தச் சுற்றறிக்கை உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாச்சாமி தனது பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை வருவாய் நிர்வாக ஆணையரகத்திற்கு மாற்றப்பட்டார். அரசு நிர்வாகத்தின் இந்த விரைவான நடவடிக்கையின் மூலம் சர்ச்சை தற்காலிகமாகத் தணிந்தாலும், அரசியல் வட்டாரங்களில் இதுகுறித்த விவாதங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…
பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…
வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…