அதிமுகவில் அடுத்த விக்கெட் அவுட்… ஒரே நாளில் 2000 பேர்… முக்கிய புள்ளியை தவெகவில் இணைத்த செங்கோட்டையன்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகவே உள்ளது. அதிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் இணைந்த பிறகு மாற்று கட்சியினர் பலரும் கட்சி தாவி வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை டார்கெட் செய்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து வருகின்றார்.

இந்நிலையில் அதிமுக வடசென்னை முன்னாள் மாவட்ட செயலாளர் வி.எஸ் பாபு தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் முன்னிலையில் இணைந்துள்ளார். விரைவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை சந்தித்து தனது தலைமையில் 2000 பெயரை கட்சியில் இணைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள பலரும் தொடர்ந்து விஜய் கட்சிக்கு படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

வைகோ வீட்டில் நடந்த அதிசயம்!… விஜய்க்கு திருஷ்டி கழித்த பணிப்பெண்… பதிலுக்கு தளபதி செய்த ‘மாஸ்’ காரியம்… அண்ணாநகர் வீட்டில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்…!!!

தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராகப் பதவியேற்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பதவியேற்பு முடிந்த கையோடு அரசியல் நாகரீகம் கருதி…

23 minutes ago

“பொறுத்திருந்து பாருங்கள்”… எடப்பாடிக்கு எதிராக சி.வி.சண்முகம் கொடுத்த ‘பஞ்ச்’… அதிமுகவில் அடுத்த அதிரடி ஆரம்பம்….!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த வரலாறு காணாத தோல்வி, அக்கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. வெறும் 47…

29 minutes ago

“தம்பி வந்ததும் ஆரத்தழுவிய அண்ணன்”.. விஜய் சென்றதும் சீமான் வீட்டில் நடந்த அந்த அதிசயம்.. மிரண்டு போன அரசியல் களம்…!

தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் ஆரோக்கியமான அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக, தமிழக முதல்வர் விஜய் இன்று நாம்…

33 minutes ago

BIG BREAKING: நாடு முழுவதும் மாற்றம்…. சற்றுமுன் மத்திய அரசு அறிவிப்பு…!

மத்திய அரசு ஊரகப்பகுதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜூலை 1 முதல் ‘VB-G RAM G’ எனும் புதிய திட்டத்தை…

40 minutes ago