தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் , தளபதி விஜய் கூட்டணியில் உருவான இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு கடைசி வரை ஏகப்பட்ட சர்ச்சைகளும் பிரச்சனைகளும் இருந்தது. ஆனாலும் அனைத்து பிரச்சனைகளையும் அசால்ட்டாக தட்டி விட்டு லியோ தற்பொழுது சாதனை புரிந்து வருகிறது. மேலும் இத்திரைப்படம் ரிலீசான முதல் நாளே உலகளவில் 148.5 கோடி ரூபாயை வசூலித்து புது உச்சத்தை எட்டியது.
இதைத்தொடர்ந்து 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. தற்பொழுது வரை திரையரங்குகள் கூட்டமாக தான் இருக்கின்றன. வசூலில் சக்க போடு போட்டு வரும் இத்திரைப்படத்தை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் சென்று ரசித்து வருகின்றனர். இந்நிலையில் லியோ படத்தில் விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையேயான லிப்லாக் சீன் குறித்து அப்படத்தின் ஒளிப்பதிவாளர் அளித்துள்ள பேட்டியானது தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அதாவது, இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையேயான லிப்லாக் சீன் ஒன்று உள்ளது. இந்த காட்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த முத்தக்காட்சியானது, வழக்கமான கிஸ்ஸாக இருக்கக் கூடாது என்பதற்காக அதை silhouette frame ஆக எடுத்தோம். அந்த silhouette-ஐ லோகேஷ் மிகவும் என்ஜாய் செய்தார். இந்த ஷாட்டை ஒரு 6 நிமிடத்தில் முடித்துவிட்டோம். அந்த முத்த காட்சியை எடுத்தவுடன் லோகேஷ் கட் சொல்லாமல். சந்தோஷத்தில் பேக்அப் சொல்லிவிட்டார்’ என்று ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில்…
உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்தச் சந்திப்பின்…
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோரை மீண்டும்…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கத் தாமதமாவதைக் கண்டித்து, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது…
தெலுங்கானாவில் உள்ள மூசி ஆற்றுக் கால்வாயில் இந்தியத் தேசியக் கொடிகள் குப்பைகளுடன் வீசப்பட்டுக் கிடக்கும் அவலமான காட்சி சமூக வலைதளங்களில்…
குவாலியரில் நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், ஸ்வெட்டரில் இருந்த ஒரு சிறிய 'ஆம்லெட் துண்டு' மற்றும்…