“விஜய்க்கு ஷாக் கொடுத்த வேலுமணி”…. தவெக-விலிருந்து அதிமுக-விற்கு படையெடுக்கும் நிர்வாகிகள்…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுகவினர் மீண்டும் தங்கள் தாய் கழகத்திற்கே திரும்ப விரும்புவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கரூர் விவகாரத்தில் தனது கட்சித் தொண்டர்கள் உயிரிழந்தபோது கூட தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை என விமர்சித்தார். இத்தகைய சூழலால் அதிருப்தியடைந்த பல தொண்டர்கள், அதிமுகவில் தங்களுக்கு உரிய அங்கீகாரமும் பதவியும் வழங்கப்பட்டால் மீண்டும் கட்சியில் இணையத் தயாராக இருப்பதாகத் தூது விட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்கள், தற்போது அங்குள்ள செயல்பாடுகளால் ஏமாற்றமடைந்து மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை நோக்கி வரத் தொடங்கியுள்ளதாக வேலுமணி சுட்டிக்காட்டினார். கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளுக்கு அதிமுக எப்போதும் மதிப்பளிக்கும் என்றும், தவெகவில் இருந்து வெளியேறத் துடிக்கும் அதிமுகவினரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக கோவை மற்றும் கொங்கு மண்டல அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

13 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

24 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

26 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

31 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

35 minutes ago