நாட்டில் பலருக்கு பல பிரச்சனை இருக்கிறது. இருக்கிற பிரச்சினைகளுக்கெல்லாம் முக்கியமான பிரச்சனை மக்களுக்கு எது என்றால் அது முடி கொட்டும் பிரச்சனை தான். என்றைக்கு ஷாம்பு என்ற ஒன்று வந்ததோ அதிலிருந்து தான் இந்த முடி கொட்டும் பிரச்சனையும் ஆரம்பித்தது. முந்தைய காலத்தில் ஷாம்பூவும் கிடையாது எதுவும் கிடையாது நம் தாத்தா பாட்டி காலத்தில் கரு கரு என நரைக்காமல் ஆரோக்கியமான முடியை கொண்டிருந்தார்கள். இப்போது 30 வயதிலேயே முடி கொட்டி வழுக்கை தலையுடன் பலர் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இளநரை பலருக்கு வந்து விட்டது. இப்படி முடி கொட்டுகிறதே இதை எப்படி செய்ய சரி செய்யலாம் என்று கவலைப்படுபவராக நீங்கள் இருந்தால் சில உணவுகளை நீங்கள் அன்றாடம் உங்கள் உணவில் எடுத்துக் கொள்ளும்போது இந்த முடி கொட்டும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். அது என்னென்ன என்பதை இனி காண்போம்.
முடி உதிர்தலை தடுக்கும் உணவுகளில் முதல் இடத்தைப் படித்து இருப்பது முட்டை. புரதச்சத்தின் சிறந்த மூலமாக இருக்கும் முட்டையை தினமும் உங்களது உணவில் எடுத்துக் கொள்ளும் போது உங்கள் முடியின் வலிமையை அது அதிகரிக்கும். அடுத்ததாக சீனி கிழங்கு. சீனி கிழங்கில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. இது உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
அடுத்ததாக கீரைகள் முடி வளர்ச்சிக்கு தேவையான போலேட் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இது முடி உதிர்வை தடுத்து வளர்ச்சிக்கு உதவும். அடுத்ததாக ஓட்ஸ் ஆகும். இதில் நார்ச்சத்துக்கள் இரும்பு துத்தநாகம் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்து இருக்கிறது. இது தலைமுடிக்கு தேவையான சத்துக்களை வழங்கி முடி அதிகமாக வளர செய்யும்.
அடுத்ததாக கேரட். கேரட் பொதுவாக கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவு என்று கூறுவார்கள். ஆனால் இது தலைமுடி வளர்வதற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. பிறகு கால்சியம் நிறைந்த உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். வால்நட், ஆளி விதை, பால் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவற்றை சாப்பிடும் போது உங்களுக்கு முடி கொட்டுவது குறைந்து புதிய முடி வளரும். இது போன்ற உணவுகளை நீங்கள் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் போது ஒரு சில மாதங்களில் உங்களுக்கே மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.
கிழக்கு டெல்லி வினோத் நகர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல் நைசாக நுழைந்த மர்ம நபர் ஒருவர்…
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில், கடுமையான போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆளான நபர் ஒருவர் தன் நிலை மறந்து சாலையில் நிலைதடுமாறித்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதி அறையில், திருமணமான மூன்றே மாதங்களில் முஸ்கான் சிமோலியா என்ற…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, குடிபோதையில் பாலியல் வீடியோக்களைக் காட்டித் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்த கணவனைக் கொடூரமான முறையில்…
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட லஞ்ச ஒழிப்பு வழக்கில், முன்னாள்…
திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர்களுடன் போதிய தொடர்பில்லாமல் விலகியிருப்பது கட்சித் தலைவர்…