Categories: சினிமா

“காதல் கண் கட்டுதே”.. இயக்குனரை திருமணம் செய்து பிறகு விவாகரத்து பெற்ற நடிகைகள்.. இதோ லிஸ்ட்..!

Spread the love

சினிமாவை பொறுத்தவரையில் நடிகர் நடிகைகள் தங்களுடன் ஒரு படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த நடிகர் நடிகைகளையும் இயக்குனர்களையும் திருமணம் செய்து கொள்வது என்பது சகஜம் தான். உதாரணத்திற்கு சூர்யா ஜோதிகா, சினேகா பிரசன்னா ஆகியோர் ஒரு படத்தில் ஒன்றாக நடித்த பிறகு அதன் பிறகு காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். அதனைப் போலவே சினிமாவில் பயணித்து இயக்குனர்களை திருமணம் செய்து கொண்ட நடிகைகளும் உள்ளனர். அவ்வகையில் இயக்குனர்களை திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து பெற்ற நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சோனியா அகர்வால்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சோனியா அகர்வால் தேவதையை கண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் செல்வராக அவனை காதலித்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சில வருடம் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ரேவதி:

90களில் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்த நடிகை ரேவதி மலையாள இயக்குனர் சுரேஷ் சந்திரா மோகனை காதலித்து 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கிட்டத்தட்ட 27 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது ரேவதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

சீதா:

90களில் பிரபலமான நடிகையாக இருந்த சீதா புதிய பாதை திரைப்படத்தில் நடிக்கும் போது இயக்குனர் பார்த்திபனை காதலித்தார். அதன் பிறகு இருவரும் 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் சுமார் 10 வருடம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

லிசி:

மலையாளத் திரை உலகில் பிரபலமான நடிகையான லிசி இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சுமார் 24 வருடங்களுக்கு மேல் இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் பிறகு இருவரும் விவாகரத்து பெற்று திரிந்தனர்.

ராதிகா:

90களில் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் பேவரட் ஹீரோயினியாகவும் வளம் வந்தவர்தான் நடிகை ராதிகா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் பிரதாப்பை காதலித்து 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் அதே ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். பின்னர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட ராதிகா அவருடன் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

Nanthini

Recent Posts

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

2 minutes ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

15 minutes ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

22 minutes ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

24 minutes ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

29 minutes ago

“நான் கனவு காண்கிறேனா?”… வீட்டிற்குள் கேட்ட கீச் கீச் சத்தம்!… வீட்டைத் திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி… 90 முட்டைகள் தானாகவே பொரிந்த அதிசயம்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ!

வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…

31 minutes ago