கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனிஷ்காந்த்-விஜயலட்சுமி நடிப்பில் மிடில் கிளாஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற 21-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. பிரணவ் முனிராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய விஜயலட்சுமி இதுதான் தனது கடைசி படம் என கூறியுள்ளார். அவர் கூறியதாவது, இடையில் நான் நடிக்காததற்கு காரணம் சரியான கதாபாத்திரம் கிடைக்கவில்லை. இனிமேல் நடிக்க கூடாது என முடிவு செய்துவிட்டேன். இதுதான் எனது கடைசி படம்.
கடைசி படம் இவ்வளவு அழகான படமாக அமைந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த வேறு ஏதாவது செய்யலாம் என யோசித்து இருக்கிறேன் என கூறியுள்ளார். விஜயலட்சுமி சென்னை 600028 படத்தில் அறிமுகமாகி அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், பிரியாணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். திடீரென நடிப்பிலிருந்து விலக உள்ளதாக விஜயலட்சுமி அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெற்ற மகளை உயிரோடு இருக்கும்போதே இறந்ததாகக் கருதி, குடும்பத்தினர் அவருக்கு ஈமச்சடங்குகளைச் செய்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. வறுமையான…
ஆந்திர மாநிலம் அல்லது வடமாநிலங்களில் நடந்ததாகக் கூறப்படும் இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மற்றும்…
சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், பரபரப்பான சந்தைப் பகுதி ஒன்றில் பல மாடி கட்டிடம்…
அதிமுக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் தன்னை முதலமைச்சராக்க முயற்சிப்பதாகத் தகவல் வந்ததாக விசிக தலைவர் திருமாவளவன்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள பொன்னபுரம் ரயில்வே கேட் அருகே சிரஞ்சீவி என்ற இளைஞர் ரயிலின் முன்…
அமைச்சராக வேண்டும் என்ற அதிகார ஆசையினால்தான் சி.வி.சண்முகம் போன்றவர்கள் ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறி வருவதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடுமையாக…