நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் சூப்பர் ஹிட் ஆகிய 600 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். விநாயக் வில்லனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கும் அனிருத் இசை அமைக்கிறார். தற்போது வந்த தகவலின் படி பாலிவுட் நடிகையான வித்யா பாலன் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
வித்யா பாலன் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அவரது மனைவியாக நடித்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். ஜெயிலர் திரைப்படத்திலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…