Categories: சினிமா

கிளாமர் ரூட்டை கையில் எடுத்த நடிகை வாணி போஜன்.. ரசிகர்களை திணறடிக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Spread the love

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தாவிய பல நடிகைகள் ஓரிரு படங்களிலேயே சொந்த ஊருக்கு நடையை கட்டி விடுவார்கள். இல்லையென்றால் மீண்டும் சீரியல் பக்கம் கரை ஒதுங்குவார்கள்.

ஆனால் தரமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே. அப்படிப்பட்ட நடிகை தான் வாணி போஜன். 38 வயதாகும் இவர் ஊட்டியில் பிறந்தவர்.

தன்னுடைய சொந்த ஊரில் உள்ள கவர்மெண்ட் ஆர்ட்ஸ் கல்லூரியில் பி ஏ இங்கிலீஷ் பாடத்தை தேர்வு செய்து படித்து பட்டம் பெற்றவர். தன்னுடைய தந்தை ஒரு வைல்ட் லைஃப் போட்டோகிராபர் என்பதால் சிறுவயதில் இருந்தே புகைப்படங்கள் மற்றும் நடிப்பின் மீது வாணி போஜன் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்ததும் ஹேர் ஹோஸ்ட்ரஸ் ட்ரைனிங் முடித்த இவர் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் இண்டிகோ விமானத்தில் பணியாற்றியுள்ளார். அப்போது இவருக்கு வெறும் 2500 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தி சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு தெரிந்தவர்கள் மூலம் திரைப்பட வாய்ப்பையும் தேடத் தொடங்கினார்.  அந்த சமயத்தில்தான் ஊர் இரவு என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பை இவருக்கு கிடைத்தது.

ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்த நிலையில் அதிகாரம் 79 என்ற திரைப்படத்தில் நடித்தார். இதுவும் ஒரு கட்டத்தில் கை கொடுக்காமல் போனதால் சீரியல் வாய்ப்புகளை தேடத் தொடங்கிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா, ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா போன்ற சீரியல்களில் சிறு சிறு வேடத்தில் நடித்தார்.

பிறகு சன் டிவியில் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தெய்வமகள் சீரியலில் சத்திய பிரியா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழில் ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படம் வெள்ளித்திரையில் வாணி போஜனுக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.  இதை தொடர்ந்து இவரை ரசிகர்கள் ‘சின்னத்திரை நயன்தாரா’ என்றும் அழைத்து வருகின்றனர். இவர் பகைவனுக்கு அருள்வாய், பாயும் புலி நீ எனக்கு, ஊர்க்குருவி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தவிர பல நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க நடிகை வாணி போஜன். ஒப்பந்தமாகியுள்ளார்.

இடையில் இவர் நடிகர் ஜெய் உடன் ஜோடி சேர்ந்த நடித்து வந்த நிலையில், அவருடன் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வைரலானது. ஆனால் இதற்கு உடனே மறுப்பு தெரிவித்தார் நடிகை வாணி போஜன்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதன்படி தற்போது ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago