#image_title
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு புஷ்பா தி ரைஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்டார் நடித்தனர். புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். புஷ்பா படம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்று 400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் தற்போது எடுக்கப்படுகிறது. இதற்கு புஷ்பா 2 தி ரூல் டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடினார் அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
யூடியூப் இன்ஸ்டாகிராம் என எந்த சோசியல் மீடியாவை பார்த்தாலும் அந்த பாட்டு தான் ஒலித்தது. இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் சமந்தா நடனம் ஆடவில்லையாம். அவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடனமாடுவார் என தகவல் வெளியானது. அது யாராக இருக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
அந்த வகையில் அனிமல் படத்தின் மூலம் நடிகை ட்ரிப்டி டிம்ரி பிரபலமானார். இவர்தான் சமந்தாவுக்கு பதிலாக புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாட உள்ளாராம். அந்த பாடல் ஷூட்டிங் இனிமேல் தான் நடக்க உள்ளது. சமந்தா அளவுக்கு இவர் நடனம் ஆடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…