தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். குறுகிய காலகட்டத்திலேயே விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்பொழுது இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.
இதை தொடர்ந்து அவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தமிழில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் மூலம் உலக அளவில் பிரபலமானார். இவர் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. தற்பொழுது இந்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை தமன்னா. நடிகை தமன்னாவும் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக இணையத்தில் அவர்கள் உறுதிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது 2005ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி, கடந்த 17 ஆண்டுகளில் பல்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து தனது 33 வயதில் மாபெரும் நடிகையாக உருவெடுத்து நிற்கும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தமன்னா வருடத்திற்கு சுமார் 12 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும், திரைத்துறையை தவிர பிற நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடர் ஆகவும் தமன்னா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தோராயமாக ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வாங்கும் தமன்னா, ஒரு ஐட்டம் சாங் ஆடுவதற்கு சுமார் 60 லட்சம் ரூபாய் வரை வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
மும்பை நகரில் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு மாபெரும் அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் தமன்னா லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ 320i, பென்ஸ் மாற்று மிட்சுபிஷி பஜிரோ ஸ்போர்ட் உள்ளிட்ட 4 உயர்ரக சொகுசு வாகனங்களை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதைத்தவிர தமன்னா சொந்தமாக ஒரு நகைக்கடை வைத்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில், மொத்தமாக அவருடைய சொத்து மதிப்பு சுமார் 110 கோடி என்று சொல்லப்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…