தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அரசியலில் முழுமையாக ஈடுபடுவதற்காகத் திரைப்படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என எடுத்துள்ள முடிவு அவரது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது கடைசிப் படமான ‘தளபதி 69’ படத்திற்குப் பிறகு அவர் முழுநேர அரசியல் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட ‘லப்பர் பந்து’ பட நடிகை சுவாசிகா, விஜய் குறித்து நெகிழ்ச்சியான சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். “சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துள்ள விஜய் சார் ஒருவேளை தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றால், அவரை கேரளாவுக்குக் கடத்திச் செல்ல ஆசைப்படுகிறேன்” என்று அவர் கலகலப்பாகக் கூறினார்.
கேரளாவில் விஜய்க்கு இருக்கும் பிரம்மாண்டமான வரவேற்பைக் குறிப்பிட்ட சுவாசிகா, “அங்கு நாங்கள் அவரைத் தலையில் வைத்துக்கொண்டாடுவோம்” என்றும், மலையாளத் திரையுலகிற்கு அவர் வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார். நடிகை சுவாசிகாவின் இந்தத் தவிப்பும், விஜய் மீதான அன்பும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…