Categories: சினிமா

இதெல்லாம் ஒரு மூஞ்சா, சினிமாவுல நீ போய் என்ன பண்ணுவ.. திட்டி தீர்த்த உறவினர்கள் முன் 2500 படங்களில் நடித்து சாதனை படைத்த நடிகையின் கதை..!

Spread the love

தனது 10 வயதில் சினிமாவில் நுழைந்தவர் தான் சுகுமாரி. 64 ஆண்டுகள் திரையுலகில் நடித்துக் கொண்டே இருந்தார். தன்னுடைய கடைசி காலத்தில் கூட அவர் நடிக்காமல் இருந்ததில்லை. பிறப்பால் மலையாளியாக இருந்தாலும் சுகுமாரி பிறந்தது நாகர்கோவிலில் தான். அன்று அந்தப் பகுதி தெரிவித்தாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அந்த நாளில் திருவிதாங்கூர் நடன சகோதரிகள் என அறியப்பட்டு பிறகு தமிழில் புகழ்பெற்ற லலிதா மற்றும் பத்மினி தாயார் சரஸ்வதி அம்மாளின் அண்ணன் மகள் தான் சுகுமாரி. சிறுவயதிலேயே சென்னைக்கு வந்த சுகுமாரி நடனத்தில் நன்கு பயிற்சி பெற்றிருந்தார். தன்னுடைய 10 வயதில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் ஓர் இரவு திரைப்படத்தில் தான் முதல் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் எ குரூப் நடன கலைஞராக நடனமாடியுள்ளார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் சாதனை இயக்குனர் பீம் சிங்கை காதல் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மரணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை சுகுமாரி தவிர்த்து வந்தார். அதன் பிறகு நடிக்க தொடங்கிய சுகுமாரி யாரடி நீ மோகினி, பொன்னர் சங்கர் திரைப்படங்களில் நடித்தார்.

இவர் தமிழில் இறுதியாக நடித்தது விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் தான். மேலும் நம்ம கிராமம் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றுள்ளார். மலையாளத்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த சுகுமாரி 2012 ஆம் ஆண்டு மட்டும் ஐந்து திரைப்படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் இவருடைய நடிப்பை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

இந்த அளவிற்கு சினிமாவில் உச்சத்திலிருந்து சுகுமாரி முதலில் சினிமாவில் நடிக்க வரும்போது அவருடைய உறவினர்கள் எல்லாம் இதெல்லாம் ஒரு மூஞ்சா, நீ சினிமாவுக்கு போய் என்ன பண்ண போற, உனக்கு யார் வாய்ப்பு கொடுப்பாங்க என்று கிண்டல் செய்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சினிமாவில் தன்னுடைய ஈடுபாடை செலுத்திய சுகுமாரி தன் 64 ஆண்டு கலை வாழ்க்கையில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் சுமார் 2500 படங்களுக்கு மேல் நடித்து அனைவரையும் வியக்க வைத்தவர். குறிப்பாக அத்தனை மொழிகளிலும் தன் சொந்த குரலில் தான் இவர் டப்பிங் பேசினார் என்பது வியக்கத்தக்கது.

Nanthini

Recent Posts

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

25 minutes ago

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

1 மணத்தியாலம் ago

“சிறுவனுடன் உல்லாசம்…” நேரில் கண்ட மாணவன்… ஜூஸில் விஷம் கலந்து தீர்த்து கட்டிய இளம்பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…

1 மணத்தியாலம் ago

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

2 மணத்தியாலங்கள் ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

2 மணத்தியாலங்கள் ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

2 மணத்தியாலங்கள் ago